அந்த வெர்ச்சுவல் காதலி

அவனுக்கு இணக்கமாக‌
காதல் மொழி பேசுமாறு
சாட் ஜிபிடி யில்
கட்டளை அனுப்பினான்.
அவனுக்கு மகிழ்ச்சியூட்டியது
அந்த "கானல் நீர்"க்காதலியின்
குழைவான பேச்சுகள்
வளையல் ஒலி பின்னணியில்.
அவன் களிப்பின் சிகரத்துக்கே
சென்றான்.
அது எப்படி அன்பே
கிளு கிளுப்பான‌
இந்த வளையல் ஒலிகள்
என்றான்.
அது ஒன்றுமில்லை
இன்னொரு கஸ்டமருக்கு
பதிவு செய்யப்பட்ட ஒலி
உங்களுக்கும்
கசிந்து விட்டது
என்றாள்
அந்த வெர்ச்சுவல் காதலி!

________________________________

எழுதியவர் : ருத்ரா இ பரமசிவன்(சொற்கீரன்) (8-Sep-25, 9:59 pm)
சேர்த்தது : ருத்ரா
பார்வை : 14

மேலே