காந்தி --- முஹம்மத் ஸர்பான்

இங்கிலாந்து நதிகள் ஒன்றாகி
இந்தியன் இந்தியன் என்கிறது
துப்பாக்கிக் குண்டுகள் பூவாகி
காந்தியின் ஈ.பி.கோ கற்கிறது
பூக் கடை சாக் கடை தீட் டென
ஜாதிச்சண்டைகள் ஏன் நண்பா
புல் வெளி நெல்மணி பட்டென
அஹிம்சைக்குள் நீ வா நண்பா
இரத்தங்கள் சிந்திய தேகங்கள்
சட்டைகள் மாற்றிய காகங்கள்
மேனி மூடா உன் கலப்பைகள்
அன்று நம் தோழியை கொன்ற
அந்நியன் நீ வென்றாய்; இன்று
பாரதம் மாறிப் போனது காந்தி
கரசக் காட்டு கள்ளிப் பாலூரில்
இந்தியனாய் நீ பிறந்து வந்திடு

எழுதியவர் : முஹம்மத் ஸர்பான் (16-Aug-18, 3:32 am)
பார்வை : 1626

மேலே