மாமாவே உன்ன நினைச்சு
மாமவே உன்ன நினைச்சு மஞ்சள் தேய்ச்சு நான் குளிச்சேன்
மஞ்சளும் சந்தனமாய் மணக்குதையா
மாமாவே உன்ன நினைச்சு
மருதாணி தான் வச்சேன்
என் கையோடு மனசும் சிவந்ததையா
மாமாவே உன்ன நினைச்சு
கைவளயல் நான்
போட்டேன் - அது நீ போடும் கல்யாண வளையலாய் மாறுதையா
மாமாவே உன்ன நினைச்சு
கழுத்தில் செயின் போட்டேன் - அது
நீ கட்டும் தாலியாக மாறுதையா
மாமாவே உன்ன நினைச்சு
பொட்டு வச்சேன் - அது நீ வைக்கும் குங்குமமாக மாறுதையா
மாமாவே உன்ன நினைச்சு
மல்லிகை பூ வச்சேன் - அது நீ சூட்டும்
மனைவியாக என்னை மாற்றுதையா
மாமாவே உன்ன நினைச்சு
சேலையை கட்டினேன் - அது நீ தரும்
கல்யாண பட்டு சேலையாய் மாறுதையா
மாமாவே உன்ன நினைச்சு கால் கொலுசு போட்டேன்
ஒவ்வொரு மணி ஓசையிலும் - அது உன் பெயர் ஒலிக்குதையா
மாமாவே
என் உச்சி முதல் பாதம் வரை உன்ன நினைச்சு வாழ்கிறேனையா
காலங்கள் தோறும் கண நேரம் உன் முகம் காண காத்திருக்கிறேனையா
உன் கண்களோடு கண்களாய் காதல் பேசும் நாளை எதிர்பார்க்கிறேனையா
உன் கையோடு கை கோர்த்து கால்கள் நடக்கும் நாளை எண்ணிப்பார்கிறேனையா
உயிருக்குள் உயிராய் உன்னை சுமந்து கொண்டிருக்கிறேனையா
மாமாவே என்
மூச்சுக்காற்றே நீயாக மூழ்கி தவிக்கிறேனையா
இரவும் பகலும் எந்நேரமும் ஒடும் கடிகாரமாய் என் மனது எந்நேரமும் உன் பெயரை உச்சரித்து கொண்டிருக்கிறதையா
கனவிலும் நினைவிலும் ஒவ்வொரு நிமிடமும் உன்னோடு நான் வாழும் வாழ்வை என்ணி என் மனம் ஏங்கி தவிக்கிறதையா
எப்போது என் ஏக்கத்தை தீர்த்து எனக்கு உன்னை தந்து உனக்குள் நான் எனக்குள் நீயாக ஒன்றாகி
உடலால் உயிரால் கலந்து மாலையிட்டு மனைவியாக்கி எப்போது என்னை வாழ வைப்பாய் என் மாமாவே!!!