நண்பன் நல்ல நண்பன்

நல்ல நண்பன் நிழலில்
நாளும் பொழுதும்
நடமாடி நல்ல எண்ணம்
நலம் கூடி நன்மை பல
கைகூடி உயர்வின் மேன்மை
உய்த்து மகிழ உண்டு
கோடி நன்மை உண்டு

அன்பின் மகிழ்ச்சி அயரா முயற்சி
அனைத்தும் காண்போம்
நட்பின் நிழலில் நட்பின்
பெயரில் நாமும் உண்டு
நீ யார் என்றால்
நம்மை அவனில் தெரிந்து
கொள்ளும் அன்பின் நெகிழ்ச்சி

அவனே நான் என தெரிந்து
கொள்ள உற்ற துணையும்
உயிர் தோழனும் எவனோ அவனே
நண்பன் நல்ல நண்பன்
நண்பனாக மட்டுமல்ல
நம்மை தொடர்ந்து வரும்
நிழலாக நிஜமாக நம்முடன்
என்றும் நிறைந்து நிற்பான்
நண்பன் நல்ல நண்பன்

எழுதியவர் : பாத்திமா மலர் (18-Feb-25, 4:47 pm)
சேர்த்தது : பாத்திமா மலர்
Tanglish : nanban nalla nanban
பார்வை : 203

மேலே