கவிதாயினி அமுதா பொற்கொடி - சுயவிவரம்

(Profile)பரிசு பெற்றவர்
இயற்பெயர்:  கவிதாயினி அமுதா பொற்கொடி
இடம்:  Chennai
பிறந்த தேதி :  17-Aug-1965
பாலினம் :  பெண்
சேர்ந்த நாள்:  16-Aug-2011
பார்த்தவர்கள்:  5918
புள்ளி:  1682

என்னைப் பற்றி...

என்னுயிரே நீ எங்கு சென்றாய்...?
எனைக் காத்த கரங்கள் ஓய்ந்தன
நடந்து தேய்ந்த கால்கள் நின்றன
எனை அழைத்த குரல் அடங்கியது
உன்னில் என் இதயம் துடிப்பை இழந்தது

பாசம் என்னும் வலையால்
எனை சுற்றி வேலியிட்டாய்
சற்றும் நான் அசையாமல்
உன் இதயக் கூட்டில் பூட்டி வைத்தாய்

துன்பம் எனை அண்டாமல்
நீயே வாசலில் காவலிட்டாய்
அன்பு என்னும் சுக தைலத்தால்
நிதமும் எனை அபிஷேகித்தாய்

ஆகாயத்தில் ஊசல் கட்டி
அதில் எனை அமர வைத்து ஆட்டி விட்டாய்
ஆடிய ஊஞ்சல் அசைவின்றி நிற்கிறது
இயக்கிய உன் கரங்கள் நின்றதால்

எனை ஆக்கிய கர்த்தரும் நீயே
எங்கும் எதிலும் எப்பொழுதும்
எனை இயக்கிய சக்தியும் நீயே
ஆயிரம் உறவுகள் இருப்பினும்
எனை ஆட்டி வைக்கும் புத்தியும் நீயே

இன்று தடுமாறுகிறேன் உன் பிரிவால்
தாங்கிய உன் கரங்கள் எங்கே?
என் விழி நனைந்த போது
உன் இதயம் உதிரம் சிந்தியதே
இன்று கதறுகிறேன் உன் நினைவால்

உன் நினைவுகளை விட்டு விட்டு
சுவடுகளை ஏன் மறைத்தாய்
எங்கு சென்றினும் விடைபெறும் நீ
இன்று மட்டும் ஏன் மறந்தாய்

கலங்கும் என் முகம் காண முடியாமல்
சொல்லாமல் நீ சென்றனையோ
எத்தனை முறை எனை அழைத்திடுவாய்
இன்று ஏன் அதை மறந்தாய்

காற்றில் கலந்த உன் குரல் அலையை
தேடி தேடித் பார்க்கிறேன்
என் கவிதைக்கு உயிரோட்டமாய் இருந்தவன் நீ
இன்று கருப்பொருளாய் மாறிவிட்டாய்

அகக்கண்ணில் காண்கிறேன்
மறைந்த உன் திருமுகத்தை
இறைந்து உன்னிடம் வேண்டுகிறேன்
எனக்கு ஒரு வரம் தந்தருள்வாய்

மீண்டும் ஒரு ஜென்மம் உண்டென்றால்
எனை சுமந்த உன்னை சுமப்பதற்கு!

- மகள். வை.அமுதா
http://www.facebook.com/Amutha17

என் படைப்புகள்
கவிதாயினி அமுதா பொற்கொடி செய்திகள்

ஒற்றுமையே பலம்

ஒற்றைக் குயிலின் ஓசையில் மட்டும்
வசந்தம் வந்திடாது...
பற்றவைத்த ஒற்றைக் குச்சியால்
அண்டம் குளிர் காய்ந்திடாது.....

நாற்றம் உடைக்கும் நறுமலர் ஒன்று
நந்தவனம் ஆகிவிடாது.....
சற்றே விலகிய சரளைக்கல்
பூகோளத்தை மாற்றிவிடாது....

சீற்றம் பெறும் மகா எழுச்சியும்
ஏற்றங்கள் தரும் பல மாற்றங்களும்
ஆற்றல்மிகு சமுதாயத்தின்
கூட்டு முயற்சியே....

இனிய காலை வணக்கம்!

மேலும்

ஓய்ந்து உறங்க சாய்ந்தாலும் உடல்...
ஓயாத அலையாய் ஆர்ப்பரிக்கின்றது உள்ளம்....
கடந்த கால நிகழ்வுகள்
நினைவு உப்பரிகையில் ஓடி ஆடி...
காலநிலையால் அடங்கி ஒடுங்கி உள்வாங்கி.....
ஆழ்மன அகழியில் கிளிஞ்சல்களாய் படிகின்றன...
பின்வரும் நாட்களின் அகழ்வாராய்ச்சிக்காய்....

மேலும்

மறைந்த என் அன்னை சந்திரா வைகுண்டம் அவர்கள் வரைந்த ஓவியம்.....

மேலும்

18.1.2017
வங்கக்கரையோரம் உறக்கம் இன்றிப் போராடும்
சிங்கத் தமிழனம் கண்டு
பீட்டாவே மூட்டைக்கட்டு.....
ஜல்லிக்கட்டு தடையை நீக்கு...

சீறிப் பாயட்டும் காளைகள்
சீற்றம் அடக்கட்டும் எம்குல காளையர்....

மேலும்

கவிதாயினி அமுதா பொற்கொடி - விக்னேஷ் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
26-Oct-2015 10:32 am

புதியதொரு வீீணை செய்ய

எங்கே உள்ளது மரங்கள்

வெந்து தனிந்ததே காடு

மேலும்

அருமை 28-Oct-2015 2:41 pm
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (342)

ஆசத்தியபிரபு

ஆசத்தியபிரபு

கோயம்புத்தூர் ,பொள்ளாச்ச
கேசவன் புருசோத்தமன்

கேசவன் புருசோத்தமன்

இராமநாதபுரம்
கவியமுதன்

கவியமுதன்

சென்னை (கோடம்பாக்கம் )
GOPI.M

GOPI.M

Tirupattur
செல்ல கார்த்திக்

செல்ல கார்த்திக்

கும்பகோணம்

இவர் பின்தொடர்பவர்கள் (343)

இவரை பின்தொடர்பவர்கள் (351)

user photo

sethuramalingam u

vickramasingapuram
மேலே