velayutham - சுயவிவரம்
(Profile)
தமிழ் பித்தன்
இயற்பெயர் | : velayutham |
இடம் | : MADURAI |
பிறந்த தேதி | : 06-Feb-1956 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 05-Jan-2013 |
பார்த்தவர்கள் | : 14126 |
புள்ளி | : 3732 |
அம்மா
அம்மா எனவே அழைத்தால் உடனே அகமகிழ்வாள்
சும்மா விருப்பினுஞ் சோறு கொடுத்துச் சுமைபொறுப்பாள்
இம்மா நிலத்தில் இவள்போல் இதயம் எவர்க்குமிலை
தம்மா லியன்றதைத் தானாகச் செய்வாள் தயவுடனே !!
சியாமளா ராஜசேகர்
கைகொடுக்க வேண்டாம்
உதைக்காமலிருங்கள்
வீழ்ந்து கிடக்கிறோம்!
எத்தனை கண்கள்
வட்டமிடும் நம்மை
ரெட்டை ரோஜா நாம்!
கண்களுக்கு விருந்து
சுவைத்து மகிழட்டும்
நம் தரிசனம் கண்டு!
எத்தனை இதயங்கள்
துடிக்கும் மகிழ்வோடு
ரெட்டை இதயம் கண்டு!
சேர்ந்து வந்தார்கள்
ராவணனாய் அண்ணன்!
கட்டபொம்மனாய் தம்பி!
'கெடுப்பது சோர்வு'
புதிய ஆத்திச்சூடியில்
பாரதி!
'கெடுப்பது உயர்வு'
சொல்லித் தந்தது
உறவு!
(கெடுப்பது சோர்வு - பிறர்க்கு தீங்கிழைப்பது இழுக்கு)
கிரீடமும் வாளும் எங்கே?
கைவீசி நடந்து வந்தான்
வீரபாண்டிய கட்டபொம்மன்!
அண்டிப் பிழைத்தான் வளரும் வரை
எட்டி உதைத்தான் வளர்ந்த பிறகு
மணியண்ணன்!
பல முறை கீழே வீழ்ந்ததன் பிறகு தான்
நான் தெரிந்து கொண்டேன்
இந்த பூமி கல்லால் ஆனது என்று
பிரிவுகள் நடத்தும்
பிரசங்கம் .......
கழனியில் உழன்ற தமிழன்
இன்று கணினியில் உலவுகிறான்
இணையத் தமிழே இனி
இவனின் விரலில் நீ வசப்பட்டதால்
ஐவகை நிலத்திலும் நிலைத்திட்ட உன்னை
ஐவிரல் ஐவிரல் கொண்டு அணைக்கிறான்
தமிழச்சி மடியில் பால்குடித்து தவழ்ந்தவன்
கணினி மடியில் தமிழ்பால் குடித்து தவழ்கிறான்
அன்று ஓலையில் கிறுக்கினான் வள்ளுவன்
நேற்று காகிதத்தில் கிறுக்கினான் பாரதி
இன்று கணினியில் கிறுக்கிறான்
இன்றைய வள்ளுவனும் நாளைய பாரதியும்
இணையத் தமிழே இனி
உன்னால் தமிழாழம் சென்றோம்
தமிழின் வேர்களை கண்டோம்
தமிழின்பம் கொண்டோம்
ஒற்றுமை ஓங்கிட
வேற்றுமை நீங்கிட
இணையத் தமிழே இனி
உன்னால் இணைந்திட்டோம்