அம்மா

அம்மா
அம்மா எனவே அழைத்தால் உடனே அகமகிழ்வாள்
சும்மா விருப்பினுஞ் சோறு கொடுத்துச் சுமைபொறுப்பாள்
இம்மா நிலத்தில் இவள்போல் இதயம் எவர்க்குமிலை
தம்மா லியன்றதைத் தானாகச் செய்வாள் தயவுடனே !!

சியாமளா ராஜசேகர்

எழுதியவர் : சியாமளா ராஜசேகர் (13-Jan-21, 12:26 am)
சேர்த்தது : Shyamala Rajasekar
Tanglish : amma
பார்வை : 122

மேலே