Dhanaraj - சுயவிவரம்
(Profile)
எழுத்தாளர்
இயற்பெயர் | : Dhanaraj |
இடம் | : கோயம்புத்தூர் |
பிறந்த தேதி | : 02-Mar-1958 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 05-Mar-2014 |
பார்த்தவர்கள் | : 1007 |
புள்ளி | : 372 |
முது நிலை பட்டதாரி தமிழிலும் ஆங்கிலத்திலும்
ராணுவ ஓய்வு
தமிழ் நதியாக நன்னிலத்தில் நானோட வேணும் , ஒரு துளி
ஆகவேணும் தமிழ் கடலில்
நான் கலக்க வேணும் !
கடலுக்குள் சஞ்சரித்த
கலைஞர்களை
கண்டு மனம் குளிர வேணும்
நட்பு நலம் விழைய வேணும் .
நண்பர்களாய் நாமிருந்தால்
நாடு பலம் காணாதோ
நல்லுறவும் கூடாதோ !
ஹிந்தி ஆங்கிலம் தெரியும்
தேகம் தொட்ட பட்டம்
====================
சரிந்துப் போகும் திடல்
எங்கோ ஓரலை தொட்ட
அவளின் கண்ணீரால்
ஈரமில்லா கரையானது
படகாய் மிதந்தது
பனித்துளி - உப்பு
காற்றை அவளின்
இதழாய் ஊதியபோது ..!!
மணலில் நுழைந்த
நண்டு அனைத்தும்
நடனம் கற்க வந்தது
மங்கையவள் மயங்கியப் போது ..!
யாரோ
தொலைத்தப் பட்டம்
அவள் தேகம் தொட்டதும்
கற்றது காதலை ..!
- இராஜ்குமார்
நாள் : 18 - 9 - 2011
இயற்கை
சூழலில்
இயற்கையான
விளையாட்டுக்கள்
இயற்கையாய்
அளித்தது
இயற்கையான
சந்தோஷத்தை !!!
இனி வருமா
அந்த பொற் காலம் ????
பக்கம்வா பழகிடலாம் பைங்கிளியே!
...பழம்போன்ற இதழதனைப் பருகிடலாம்!
முக்கனியே! முழுநிலவே! மரகதமே!
...முத்தத்தில் மூழ்கியே முகம்சிவப்போம்!
முக்கியமாய் முன்னிற்கும் காமமிதை
...மூச்சிரைக்க பேச்சிழந்து முயன்றுபார்ப்போம்!
சக்கரையே! சம்மதமா? ஒப்புவாயா?
...சமதர்மம் பேசிஎனை துப்புவாயா?!
காந்தியும் மனிதர்தானா ,அவரைப்
படைத்ததும் கடவுள் தானா ,
கூம்பிய வாளின் உறையாம்-அவர்
கொள்கைகள் நிரம்பிய மறையாம் ! 1
சத்தியம் வழியே நின்றார் -காந்தி
சாத்தியக் கொள்கையை ஈன்றார் !
கத்தியும் பணியக் கண்டார் ,அவரைக்
குத்திய நெஞ்சையும் வென்றார் ! 2
எல்லாம் இருந்தும் ஏழ்மை ஏற்றார்
எளிய வாழ்வில் தனையே வதைத்தார் !
பொல்லா சிறைகள் முள்ளாய் வருத்தியும்
விடுதலை ஒன்றே தான் விரும்பிய தென்றார் ! 3
இம்சைகள் கோடி இமயமாய் நின்றார்
அகிம்சை ஒன்றே ஆயுதம் என்றார் !
அந்நிய ஆங்கில ஆலமரத்தை அதன்
கர்ஜியுங்கள்
கலப்படம் கலந்த
கயவர்களை காணும் போது !!
விரட்டி அடியுங்கள்
வேடம் தரித்த
மனிதர்களை !!!
வீரமாய்
செயல்படுங்கள்
தோல்வியை தழுவும் போது !!
தன்னம்பிக்கையோடு
நடையை தொடருங்கள்
இன்னல்களை தவிடு பொடியாக்க !
அமைதியாய் தோற்றமளித்தால்
அழித்து விடுவார்கள் !
ஆளுமையான தோற்றத்திற்கு
அடங்கி விடுவார்கள் !
இது தான் இன்றைய உலகம் !!
கர்ஜியுங்கள்
உங்கள் சுய ரூபத்தை வெளிபடுத்த !!
தன்னி கரில்லா தமிழ னவர்
===தலைகள் வணங்கும் பெருந் தலைவரவர்
தென்னில முதித்த வேங்கை யவர்
===தெய்வத் திலுய்த்த மாமனி தரவர் !
கதராடை தரித்த கருந்த லையர்
-===காண்போர்க் கெளிய பெருந் தலைவர்
சுதந்திரப் போரில் சிறை சென்றவர்
===சுடரொளியாய் மக்கள் இடர் களைந்தவர் !
வறட்சியில் உணவுப் புரட்சி கண்டவர்
===வாடிய மனிதர்க்கு வழிவகை செய்தவர்
இறப்பிலும் இதயத்தை ஏழைக் கீந்தவர்
===இவர்போல் வேறு தலைவரும் பிறந்திலர் !
பள்ளிக் குழந்தைக்கு பாடம் சொன்னவர்
==="படிக்கா மேதை" தடம் பதித்தவர்
வள்ளலும் தோற்கும் உள்ளம் கொண்டவர்
===வாழ்வைப் பொதுப்பணிக் கர்ப்பணம் செய்தவர் !
தன்னி கரில்லா தமிழ னவர்
===தலைகள் வணங்கும் பெருந் தலைவரவர்
தென்னில முதித்த வேங்கை யவர்
===தெய்வத் திலுய்த்த மாமனி தரவர் !
கதராடை தரித்த கருந்த லையர்
-===காண்போர்க் கெளிய பெருந் தலைவர்
சுதந்திரப் போரில் சிறை சென்றவர்
===சுடரொளியாய் மக்கள் இடர் களைந்தவர் !
வறட்சியில் உணவுப் புரட்சி கண்டவர்
===வாடிய மனிதர்க்கு வழிவகை செய்தவர்
இறப்பிலும் இதயத்தை ஏழைக் கீந்தவர்
===இவர்போல் வேறு தலைவரும் பிறந்திலர் !
பள்ளிக் குழந்தைக்கு பாடம் சொன்னவர்
==="படிக்கா மேதை" தடம் பதித்தவர்
வள்ளலும் தோற்கும் உள்ளம் கொண்டவர்
===வாழ்வைப் பொதுப்பணிக் கர்ப்பணம் செய்தவர் !
மோடியும் சரீபும் கூடியினி
==எல்லைக் கோட்டை அழிக்கட்டுமே !
வாடிய மக்களைக் கூட்டியினி
==வல்லர சொன்றை வார்க்கட்டுமே !
தென்கிழக் காசியக் கூட்டமைப்பு
==மோடியின் தலைமையில் அமையட்டுமே !
பன்முகப் பரிணாமம் களையப்பட்டு
==பாரினி ஓரின மாகட்டுமே !
இந்தியா பிந்திய நாடல்ல
==சிந்திய குருதி வீணல்ல
வந்தி செய்வது நன்றல்ல
==வல்லரசாவது பொய்யல்ல !
பாரத அன்னையின் புதல்வன்
==பரிசுத்த ஆட்சியின் தலைவன்
தாரகப் பிரம்மம் மோடியவன்
==தங்க உலகின் விடியலவன் !
உலகமே விரும்பும் உத்தமனாய்
==உன் பணிகள் உயர்ந்து விளங்கட்டும் !
ஊழலே இல்லா பேருலகை உன்
==உதயம் இனி படைக்கட்டும் !
காறித் துப்பிய எச்சிலையும்
கழித்த மல சல கழிவுகளையும்
ஏந்திக் கொள்ளும் !
வெடி வைத்து தகர்த்தாலும் ,
வெட்டிக் குத்தி குழி பறித்தாலும் ,
கட்டிக் கட்டி கட்டிடமாய் தன்மேல் வைத்தாலும்
சுமக்கும் !
பயிர்களைத் தாங்கி
பலன் தரும் ,
மரங்களைத் தாங்கி
பழந்தரும் !
உயிரோடிருக்கும் வரை
மட்டுமல்ல ;
உயிர் நீங்கிய உடலையு மது
தாங்கிக் கொண்டுதானி ருக்கிறது ,
எல்லாவற்றையும்
தாங்கிக் கொண்டு !
நீ என்னை வெறுத்த பொழுதெல்லாம் கனக்காத என் மனம்
நான் உன்னை வெறுத்த அன்று கனத்ததடா!
கவிக்கோ. அப்துல் ரகுமான்
மதம் இன்று ஒரு கெட்டவார்த்தையாக மாறிவிட்டது. ‘மதவாதி’ என்று ஒருவனை இன்று சொல்கிறோம் என்றால் மோசமான ஆள் என்று சொல்கிறோம் என்று ஆகிவிட்டது. அதற்கு காரணம் என்னவென்றால் எல்லா மதங்களிலும் மதவாதிகளிடம் லேபிள் மட்டும்தான் இருக்கிறது. உள்ளே சரக்கே இல்லை. மதம் படித்திருக்கிறார்களா என்றால் இல்லை மதம் பிடித்திருக்கிறார்கள்.
சமயங்கள் அத்தனையும் அடிப்படையான உண்மையாக ஒன்றைத்தான் சொல்கின்றன. உண்மையே இறைவன் என்றால் நாத்திகம் வந்திருக்காது. இறைவன் உண்மை என்றான் பிரச்சனை வந்துவிட்டத (...)
தமிழை என்றும் காக்க
தலையையும் தானம் தருவேன் - செந்
தணலில் எரித்தால்கூட - செந்
தமிழை நானும் மறவேன்...
ஈன்றவள் தந்தது தாய்ப்பால் - அட
தமிழும் எனக்குத் தாய்ப்பால்
குறளில் குடித்தேன் முப்பால் - முத்
தமிழில் சுவைத்தேன் தேன்பால்...
என்னிலம் நன்னிலம் என்பேன் - அட
என்னுயிர் தமிழே என்பேன்
எங்கும்தமிழை விதைப்பேன் - எனை
புதைத்தாலும் தமிழாய் முளைப்பேன்...
பாரில் பலமொழி இருப்பு - அதில்
பைந்தமிழேத் தனிச் சிறப்பு
காரில் குதிக்கும் மழையும் - அட
கவிதைகள் இசைக்கும் தமிழில்...
சொல்வளம் கொண்டது தமிழாம் - இல்லை
பல்வளம் நிறைந்தது என்பேன்
தேனாய் இனிக்கும் தமிழாம் - இல்லை
அதைவிட இனிக்கும் எ