கவியாழினி - சுயவிவரம்

(Profile)பரிசு பெற்றவர்
இயற்பெயர்:  கவியாழினி
இடம்:  தமிழ்நாடு -புலவர்கோட்டை
பிறந்த தேதி :  29-Dec-1992
பாலினம் :  பெண்
சேர்ந்த நாள்:  08-Sep-2012
பார்த்தவர்கள்:  7911
புள்ளி:  1909

என்னைப் பற்றி...

பிறந்தேன் வாழ்ந்தேன் இறந்தேன் என்று வாழாமல்
பிறந்தேன் சாதித்தேன் விதையாய் விழுந்தேன் விருட்சமாய் எழுவேன் "
"பிறரை வாழவைத்து வாழ்ந்துபார் ஒரு பிறவியில் பல வாழ்வு வாழலாம் "
என்ற எண்ணத்தில் வாழ்பவள் ...

எனதருமை பாரதத்தில் பாரதியின் பண்புள்ள புதுமை பெண் .
என்னுடைய உணர்வுகளின் சாரல் மழையில் சிறிது உள்ளம் நிறைய http://kaviyazhinisaran.blogspot.in/

என் படைப்புகள்
கவியாழினி செய்திகள்
கவியாழினி அளித்த படைப்பை (public) க வசந்தமணி மற்றும் 1 உறுப்பினர் பகிர்ந்துள்ளனர்
03-Jan-2016 11:29 am

மேலோட்டமாய் பார்ப்பவருக்கு இரவு இருட்டு !
ஆழ்ந்து பார்ப்பவருக்கு இரவு வெளிச்சம்!!

உறங்க நினைப்பவருக்கு அசதி அடித்து போக்கும்!
உணர்வாய் பார்பவருக்கு எண்ணம் அள்ளி தரும்!!

சோர்வானவர்களுக்கு இரவு புறக்கண் மூட வைக்கும்!
சேர்ந்து பயணிப்பவருக்கு இரவு அகக்கண் திறக்கவைக்கும்!!

ஓய்வு தேடுவோருக்கு ஓரிடத்தில் சிந்தனை குவிய வைக்கும்!
ஓயாமல் தேடுவோருக்கு ஓராயிரம் சிந்தனையில் விரிய வைக்கு!!
@@@@ இரவு மனிதனுக்கு இனிய உலகு @@@@
...கவியாழினிசரண்யா ...

மேலும்

வருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றி :-) 10-Jan-2016 10:34 am
மிக்க மகிழ்ச்சி தோழமையே :-) 10-Jan-2016 10:33 am
தங்கள் வரவிலும் கருத்திலும் மிக்க மகிழ்ச்சி :-) தங்கள் கருத்து உண்மை :-) 10-Jan-2016 10:33 am
அருமையான படம். அதை அருமையாக விளக்கும் சிந்தனை. வாழ்த்துகள். 06-Jan-2016 10:45 pm
கவிஜி அளித்த படைப்பில் (public) SARAVANA KUMAR M மற்றும் 6 உறுப்பினர்கள் கருத்து அளித்துள்ளனர்
08-Apr-2016 11:13 am

கொக்கு போல காத்திருக்கு வாழ்க்கை...
------------------------------------------------------------

கருப்பன் புள்ள
படிச்சா பொறுக்காது...
கருப்பு புள்ளைக்கு
தாலி கிடைக்காது...

வெறுப்ப சுமக்கும்
உருவத்துல வாழ்க்கை..
வேதாந்தம் பேசினவன்
இருபதிலேயே வழுக்கை...

நிலவுல என்னருக்கு
ஆராய்ச்சி நடக்குது...
ரேஷன் அரிசியில புழுவிருக்கு
ஆனாலும் திங்குது...

அத பூசு இதத் தின்னு
அத ஓட்டு இத மாட்டு
விளம்பரம் வீட்டுக்குள்ள....

வறுத்த முந்திரி
வளமை சுந்தரி
பணக்காரன் நோட்டுக்குள்ள...

கண்ணையாவ உள்ள போடு
மல்லையாவ வெளிய அனுப்பு
கோமாளிங்க நாட்டுக்குள்ள...

வயிறெரிஞ்ச தினக்கூலி

மேலும்

போற்றுதற்குரிய படைப்பு பாராட்டுக்கள் தொடரட்டும் உமது இலக்கிய பயணம் தமிழ் அன்னை ஆசிகள் 28-Nov-2016 3:32 pm
மிகவும் அருமையாக உள்ளது ! வாழ்த்துக்கள் 30-May-2016 2:50 pm
சுடுகின்ற நிதர்சங்கள் 26-May-2016 4:24 pm
கவி அருமை கவிஞரே 21-Apr-2016 1:58 pm
கயல்விழி மணிவாசன் அளித்த படைப்பில் (public) Anithbala மற்றும் 17 உறுப்பினர்கள் கருத்து அளித்துள்ளனர்
16-Oct-2015 2:55 pm

மழை நீரில் நனையாதே ஜலதோஷம் பிடித்துவிடும்
முழுவதும் நனைந்துகொண்டு முந்தானையால் என் தலை மூடும்
தாயிடம்
--உனக்கு ஜலதோஷம் பிடிக்காதா அம்மா .!

காலைக்கடன் கழிப்பதற்கு காட்டுக்கு போகும் போது
காலில் முள்ளு தைக்கும் முதுகினில் ஏறிக்கொள்-உப்புமூட்டை சுமந்தவளே
--உன் பாதம் முட்கள் துளைக்காதா அம்மா .

பிடியளவு சோறு தான் பானையில் இருந்தாலும்
பிள்ளை வயிறு பசி பொறுக்காது
என்பவளே
--உன் வயிறுக்கு பசிக்காதா அம்மா .!

வேதனை எனக்கென்றால்
விம்மி நான் அழுதால்
விடியும் வரை விழித்திருந்து
விழியில் உதிரம் வடிப்பாயே
--உன் விழிகள் வலிக்காதா அம்மா .!

தவறுகள் நான் செய்ய
தண்டனை நீ பெ

மேலும்

எத்தனையோ தலைப்புகளில் கவிதை எழுதினாலும்... அன்னை என்று எழுதும் போதும் அம்மா என்று எழுதும் போதும் கோடிக்கணக்கில் ரசிகர்கள் வருவது அன்பு என்றவற்றை வார்த்தைக்கு ஆகத்தான்... அந்த அன்பை அன்னையைத் தவிர வேறு எவராலும் தர முடியாது.. உண்மையான எதார்த்தமான படைப்பு... வாழ்த்துக்கள் நண்பரே பெற்ற பரிசுக்கும் பாராட்டுகளுக்கும்...💐 அன்புடன் அனித்பாலா 14-Oct-2023 8:52 pm
Arumaiyana padaippu vazthukal thozhi.... 💐💐💐💐 30-Aug-2022 9:46 pm
அருமைங்க 08-Jul-2022 12:29 pm
அருமை நண்பா!! அம்மா இல்லையேல் இந்த பூமியே கிடையாது...... 24-Mar-2022 11:00 pm
அ வேளாங்கண்ணி அளித்த படைப்பில் (public) அ வேளாங்கண்ணி மற்றும் 4 உறுப்பினர்கள் கருத்து அளித்துள்ளனர்
17-Apr-2016 8:17 am

கவிதை தொக்கு - 6 - அ.வேளாங்கண்ணி
=================================

பரந்து விரிஞ்சிருக்கும்
====கடலவிட நீ பெருசு
நீபொய்த்துப் போனியினா
====உசுரிருந்தும் நான் தரிசு
அரசியல்வாதி போல‌
====பலமுகத்த நீ காட்ட‌
வயலுக்கும் வியாதிவரும்
====எம் பொழப்பு மண்ணாகிடும்

மழவரும்னு எதிர்பார்த்தா
====கருமேகம் ஒளிய வைப்ப‌
வெயில்வரும்னு பாக்கையில‌
====பெருமழய பொழிய வைப்ப‌
நீதானே எங்களோட‌
====மானம் காக்கும் கூரையான‌
எம்பொழப்ப நெனைக்கையில‌
====மனசு விட்டுப் போயிடுச்சு

நீபோட்டுருப்ப கோடிநகை
====ரெண்ட பொஞ்சாதிக்கு அனுப்பிவையி
ஒன்ன அலங்கரிக்கும் ஏழுவண்ண‌
====பொடவ கிழிச்சு உதவிசெய்யி
எங்கநகையெ

மேலும்

மிக்க நன்றி ஐயா.. 25-Nov-2016 8:40 pm
தமிழ் அன்னையின் கவிதை மலர்க் கிரீடம் போற்றுதற்குரிய உழவர் மேலாண்மைக் கருத்துக்கள் இதயம் கனிந்த பாராட்டுக்கள் தொடரட்டும் உமது தமிழ் இலக்கிய பயணம் 25-Nov-2016 4:10 pm
தங்கள் வருகைக்கும் கருத்திற்கும் வந்தனம் தோழரே... 25-Apr-2016 8:04 am
மிகவும் அருமையான கவிதை வாழ்த்துக்கள் 24-Apr-2016 4:00 pm
காதலாரா அளித்த படைப்பில் (public) ஆண்டன் பெனி மற்றும் 18 உறுப்பினர்கள் கருத்து அளித்துள்ளனர்
27-Dec-2015 12:21 am

காட்சிப் பிழைகள் - 16 - காதலாரா
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

சுழன்று சுற்றும் வெளியில்
பார் செதுக்கும் விழியால்
எனை யாரென ...பார் ...
அது காதல் யுக வேர் ...

குறுகிக் கிடக்கும் உன்னிடை
திருகிச் சிவந்த என்விரலில்
பெருகி அவிழும் வரிகளை
பருகி மடிந்தது நம்மிதழ்...

பிரிவின் பின் ..திரையில்
விரியும் முத்த முடிவில்
உன் மொத்த உருவத்தால்
ஓங்கி அறைகிறாய்
என்னிரு கன்னம் வீங்க ...

தேகத்தின் ரோமத்தில்
மோகத்தின் வேகத்தை
வானத்தின் கோபமாக்கி
பாலைவன தாகத்தில் சுடுகிறாய்...


உனக்கான கவிதைகளை..
படிக்காமல் புதைப்பதை விட ..
என்னுடல் புதைக்கையில்
ஏதேனும் எழுதி வி

மேலும்

வாழ்த்துக்கள். கவிதை அருமை ! 18-Jan-2016 2:30 pm
அழகிய சொல்லாடல் நிறைந்து கவிதை தாலாட்டுகிறது ! 18-Jan-2016 10:18 am
யப்பா என்னவொரு வீரியமான சொல்லாடல்.. அசத்தி இருக்க ராஜ்.. இதுதான் தம்பி...யின் எழுத்து.. இத்தொடரில்.. நீயுமொரு கஸல் நாயகன்.. .. வா தம்பி.. கட்டியணைத்து பாராட்டுகிறேன். நாடி நரம்பு சதை புத்தி எல்லாம் காதல் உணர்வேறிய ஒரு கவிஞன் எழுதிய இப்படைப்பு.. சபாஷ் சபாஷ் சபாஷ்.. 12-Jan-2016 9:46 pm
மகிழ்ச்சி தங்கச்சி 07-Jan-2016 5:39 am
கவியாழினி - படைப்பு (public) அளித்துள்ளார்
03-Jan-2016 11:29 am

மேலோட்டமாய் பார்ப்பவருக்கு இரவு இருட்டு !
ஆழ்ந்து பார்ப்பவருக்கு இரவு வெளிச்சம்!!

உறங்க நினைப்பவருக்கு அசதி அடித்து போக்கும்!
உணர்வாய் பார்பவருக்கு எண்ணம் அள்ளி தரும்!!

சோர்வானவர்களுக்கு இரவு புறக்கண் மூட வைக்கும்!
சேர்ந்து பயணிப்பவருக்கு இரவு அகக்கண் திறக்கவைக்கும்!!

ஓய்வு தேடுவோருக்கு ஓரிடத்தில் சிந்தனை குவிய வைக்கும்!
ஓயாமல் தேடுவோருக்கு ஓராயிரம் சிந்தனையில் விரிய வைக்கு!!
@@@@ இரவு மனிதனுக்கு இனிய உலகு @@@@
...கவியாழினிசரண்யா ...

மேலும்

வருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றி :-) 10-Jan-2016 10:34 am
மிக்க மகிழ்ச்சி தோழமையே :-) 10-Jan-2016 10:33 am
தங்கள் வரவிலும் கருத்திலும் மிக்க மகிழ்ச்சி :-) தங்கள் கருத்து உண்மை :-) 10-Jan-2016 10:33 am
அருமையான படம். அதை அருமையாக விளக்கும் சிந்தனை. வாழ்த்துகள். 06-Jan-2016 10:45 pm
கவியாழினி - C. SHANTHI அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
02-Jan-2016 9:24 pm

அழித்த வெள்ளமும் காத்த உள்ளமும்....!!

வானிலை அறிக்கை விட்டிருந்தார்
செயற்கைக் கோள் செய்தியாளர்
அடைமழையின் அறிகுறிகளை
கூகிள் வரைபடங்களில் ....!!

"எப்போதும் போலான மழைதானே"
ஏளனம் செய்தோரின் இல்லம் தேடி
வேட்டையாடி களித்திருந்தது மழை...!

ஆக்கிரமிப்பு நடத்திய இடத்தையெல்லாம்
ஆக்கிரமிப்புகள் செய்து
அதிகாரம் செலுத்தி இருந்தது மழை...!!

எந்த அதிகாரிகளால் என்ன செய்ய இயலும்..?
சட்டாம்பிள்ளையாய்
சண்டித்தனம் செய்திருந்தது மழை..!

விதி மீறல்களில் எங்களின் சதி
இப்படியாகத்தான் இருக்கும்
ஆவேசத்தில் அத்தனை பேரையும்
பழிவாங்கி இருந்தது மழை..!

ஓட விரட்டியது, படியேற வ

மேலும்

//பசியும் பட்டினியும் சமமானபோது சொந்தமும் பந்தமும் ஒன்றாகிப் போனது// //சாதி மத பேதங்களை, ஏற்றத் தாழ்வுகளை முறியடித்த மாமழையே வெள்ளமாக வந்து மனிதநேய பாடங்கள் கற்பித்த வாத்தியார் நீ... தேர்ச்சி பெற்றோம் நீ வைத்த தேர்வினில்//.....உண்மையை உணர்த்தியகவி வரிகள் மிகவும் அருமை அம்மா...... மழைக்கவிதை பல சிறப்பாய் எழுதியிருந்தீர் அருமை அம்மா...உடமைகளோடு மனிதனின் ஆணவத்தையும் அடித்து சென்றுவிட்டது மழை......!!! 14-Jan-2016 1:28 pm
மிக்க நலம் அக்கா நீண்ட நாட்களுக்கு பின்னே வந்துள்ளேன்.....:-) 10-Jan-2016 10:30 am
யாழினி நலமா..?? நீண்ட நாட்களுக்குப் பிறகு நான் உன்னை காண்கிறேன். கருத்திற்கு மிக்க நன்றி யாழினி..! 03-Jan-2016 8:29 pm
அக்கா உண்மைதான் மதம் மொழி சாதி அரசியல் என பிரிந்திரிந்த மக்களின் மனிதம் வெளிக்காட்டியது படைப்பு சிறப்பு :-) 03-Jan-2016 11:33 am
கவியாழினி - படைப்பு (public) அளித்துள்ளார்
02-Aug-2015 1:14 pm

மண்ணில் வாழும் மக்களின்
மனமெல்லாம் நிறைந்து விட்டதென
விண்ணுலகம் காண சென்றீரோ!

நீங்கள் வித்திட்ட விதைகளும்
அவை வளர நீங்கள் அளித்த
எழுச்சி மிக்க கருத்துக்களும்
வேர்விட தொடங்கியதென எண்ணி
நிம்மதியாய் வேறுலகம் சென்றீரோ!

விண்ணை பற்றிய உம் அறிவியலும்
மண்ணின் மீதான நும் பாசமும்
மாணவர் மீதான உங்கள் நேசமும்
எழுச்சிமிக்க நும் எண்ணங்களும்
இனி நாங்கள் எங்கு காண்போம்!

தூங்கும் மனதை தட்டி எழுப்பி
நீர் பதியமிட்ட கருத்துக்கள்

பள்ளி சிறார்களிடம் வேரூன்றுகிறது
இளைஞர்களிடம் வளர்கிறது
மக்களிடம் பாதுகாக்கப்படுகிறது

கண்டிப்பாய் வல்லரசாய்
உங்கள் கனவு பூக்கள் மலரும்

அந்

மேலும்

வெற்றி பூக்களுக்கான நாள்நோக்கி உங்கள் பாத சுவட்டை பின்பற்றி வழி நடக்கிறோம், வழி நடத்துங்கள் எங்கள் இதயம் வாழும் உன்னத மாணிக்கமே! ------- வாழ்வோம் அவரின் வாக்கிர்கிணங்கி! வெல்வோம் அவரின் அன்பை என்றும்! 09-Aug-2015 9:24 pm
இந்தியாவை நேசித்த ஒரு இந்தியன்..! இன்று நம்மோடு இல்லை.... இனி என்றும் ஒருவர் இல்லை... இந்தியாவை நேசிக்கும் ஒரு இந்தியன்....! 03-Aug-2015 12:23 pm
ஒரு உன்னத மா மனிதருக்கு இது அஞ்சலியாகட்டும்... தமிழருக்கு பெருமை சேர்த்த மனிதர்.... நல்ல கவிதை.. வாழ்துக்கள் தொடருங்கள்.. 03-Aug-2015 12:25 am
விண்ணை பற்றிய உம் அறிவியலும் மண்ணின் மீதான நும் பாசமும் மாணவர் மீதான உங்கள் நேசமும் எழுச்சிமிக்க நும் எண்ணங்களும் இனி நாங்கள் எங்கு காண்போம்! ------------------------------------------------------- தாங்கள் புரிந்த சாதனைகளில் தாங்கள் பெரிதாக நினைப்பது எதுவென கேட்டபோது .. போலியோ பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு 10 இல் ஒரு பங்காக எடை குறைந்த செயற்கை கால் கண்டுபிடித்ததே என்ற பதிலின் போது அவர் முகத்தில் தோன்றும் உணர்ச்சியை கண்டபோது ரொம்பவும் நெகிழச் செய்தது.. இனி என்று காண்போம் இவரை என்றே எங்க செய்தது.. ! நல்ல அஞ்சலி தோழி..! 02-Aug-2015 1:56 pm
கவியாழினி - படைப்பு (public) அளித்துள்ளார்
14-Sep-2014 2:03 pm

அழகான வாழ்க்கை ஓடிவிடாமலும்
காத்திருக்காமலும் அனுதினம் நகர்கிறது

ரோஜா முட்கள் குற்றினாலும் வலிக்காக
நேரம் ஒதுக்க முடியாமல் ஓடினாலும்
வழியில் தென்படும் மலர்ந்த ரோஜாவை
ரசிக்க மறப்பதில்லை இந்த மனம்

போராட்டங்கள் வாழ்வின் வேர்வரை
வதைத்தாலும் வளர்வதற்காக அதற்க்கு
நீரோட்டம் அமைக்க தவறுவதில்லை இந்த மனம்

சருகுகளின் பாதையிலே வாழ்கை
பயணித்தாலும் பசுமை புற்களின்
பச்சை வாசம் மறக்கவில்லை இந்த மனம்

அழுகை என்னுள் அருவியாய் கொட்டினாலும்
சிரிக்கும் நேரம் வருகையில் சிரிப்பை
வீணாக்க நினைப்பதில்லை இந்த மனம்

வலியோடு வாழ்க்கை வரமறுத்து
வலுகட்டாயமாய் நகர்ந்தாலும்
அந்த ந

மேலும்

ரோஜா முட்கள் குற்றினாலும் வலிக்காக நேரம் ஒதுக்க முடியாமல் ஓடினாலும் வழியில் தென்படும் மலர்ந்த ரோஜாவை ரசிக்க மறப்பதில்லை இந்த மனம் .... மனம் கவர்ந்த வரிகள் .. கவிதை அசையாத நீரோடை .. 06-Feb-2016 12:56 pm
அருமை! 29-Dec-2014 8:00 am
உண்மையான படைப்பு .... 13-Dec-2014 10:03 am
வலியோடு வாழ்க்கை வரமறுத்து வலுகட்டாயமாய் நகர்ந்தாலும் அந்த நகர்வின் சிற் சிறு மகிழ்ச்சிகளை தேடி மகிழாமல் விடுவதில்லை இந்த மனம் அருமை சரண்யா 04-Nov-2014 4:14 pm
கவியாழினி - படைப்பு (public) அளித்துள்ளார்
27-Jul-2014 12:27 pm

நீ என்னோடு இல்லையென்ற நிஜத்தை
நீ என்னோடு இருப்பதான நினைவுகள்
தோற்கடிக்கின்றன ; நீ என்னோடு
இல்லையென கேலி செய்கையில் பிம்பமற்ற
நிழலாய் வந்து வேலியென நிற்கிறாய் நீ

கடற்கரை மணலில் என் கால்தடங்களின்
அருகில் உன் கைபிடித்து வரும் இடைவெளிதாண்டி
இல்லாத உன் பாதச்சுவடுகள் இருப்பதாகவே
எண்ணி மகிழ்கிறேன் எப்பொழுதும் நான்

என்னை சுற்றி ஒலிக்கும் எத்துணையோ
சப்தங்களுக்கு மத்தியில் உன் குரல்நான்கள்
எழுப்பிய ஒலிகள் மட்டும் என்னுள் சங்கீதமாய்
வீணை மீட்டிகொன்டே இருக்கிறது

வருடங்கள் ஓடினாலும் வயதே கூடினாலும்
சித்திரை வெயிலிலும் நித்திரை கொள்கிறேன்
உன் மார்பின் கதகதப்பில் என் தல

மேலும்

மிகவும் அருமை...... 13-Dec-2014 10:46 pm
அருமை! 13-Dec-2014 10:49 am
மிகவும் அருமை வலி நிறைந்த நினைவுகள் பொக்கிசமாக 13-Dec-2014 10:35 am
உள்ளத்தின் வெளிப்பாட்டின் வலிகள் மிக நன்று ..... 13-Dec-2014 10:05 am
மனோ ரெட் அளித்த கேள்வியை (public) நா கூர் கவி மற்றும் 1 உறுப்பினர் பகிர்ந்துள்ளனர்
22-Jun-2014 2:33 pm

எழுத்து நண்பர்களுக்கு வணக்கம்...!!
முகம் தெரிந்த மற்றும் தெரியாத என் நண்பர்களிடம் உதவி கேட்பதில் மிக்க மகிழ்ச்சி..!
எதாவது வேலை வாய்ப்பு இருந்தால் என்னிடம் பகிருங்கள்..!
நான் BTECH .,INFORMATION TECH 2012 முடித்துள்ளேன்....
எந்த துறை வேலையானாலும் செய்வதற்கு நான் தயார்..!!
நண்பர்களே உதவிடுங்கள்..!!

மேலும்

நல்ல தொழில் கிடைக்க வாழ்த்துக்கள் நண்பரே ! 24-Jun-2014 4:44 am
அதற்கான வழியை தேடுகிறேன் என்றால் எப்படி..? AUTO CAD , INTERIOR DESIGN, GRAPHIC DESIGN, இந்த துறையில் வேலைகள் செய்ய தெரியுமா..? இதில் வேலை செய்த அனுபவம் இருக்கிறதா..? அப்புறம் எந்த துறை வேலையானாலும் நான் செய்வதற்கு தயார் என்று சொல்வது எனக்கு சரியாக தெரியவில்லை..! உங்கள் படிப்புக்கு ஏற்ற வேலையை தேடுங்கள்..! அந்த துறையில் அனுபவம் பெற்று எதிர் காலத்தில் சிறப்பாக பிரகாசிக்க முடியும்..! 22-Jun-2014 4:50 pm
மிக்க நன்றி அம்மா....! 22-Jun-2014 4:39 pm
அதற்கான வழியை தேடுகிறேன்.....குமரிப்பையன் 22-Jun-2014 4:39 pm
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (535)

அரூபி

அரூபி

Srilanka
ஆரோ

ஆரோ

விழுப்புரம்,(சென்னை)
இராஜ்குமார்

இராஜ்குமார்

திரு ஆப்பனூர்
Shahmiya Hussain

Shahmiya Hussain

தர்கா நகர் - இலங்கை

இவர் பின்தொடர்பவர்கள் (536)

Rajesh Kumar

Rajesh Kumar

கோயம்புத்தூர்
கீத்ஸ்

கீத்ஸ்

கோவை
Prakash G

Prakash G

மதராஸ் பட்டணம்

இவரை பின்தொடர்பவர்கள் (536)

venky

venky

கோயம்புத்தூர்
selva.sharapova

selva.sharapova

thiruvallur
அஹமது அலி

அஹமது அலி

இராமநாதபுரம்

என் படங்கள் (3)

Individual Status Image Individual Status Image Individual Status Image
மேலே