== இந்த மனம் ====

அழகான வாழ்க்கை ஓடிவிடாமலும்
காத்திருக்காமலும் அனுதினம் நகர்கிறது

ரோஜா முட்கள் குற்றினாலும் வலிக்காக
நேரம் ஒதுக்க முடியாமல் ஓடினாலும்
வழியில் தென்படும் மலர்ந்த ரோஜாவை
ரசிக்க மறப்பதில்லை இந்த மனம்

போராட்டங்கள் வாழ்வின் வேர்வரை
வதைத்தாலும் வளர்வதற்காக அதற்க்கு
நீரோட்டம் அமைக்க தவறுவதில்லை இந்த மனம்

சருகுகளின் பாதையிலே வாழ்கை
பயணித்தாலும் பசுமை புற்களின்
பச்சை வாசம் மறக்கவில்லை இந்த மனம்

அழுகை என்னுள் அருவியாய் கொட்டினாலும்
சிரிக்கும் நேரம் வருகையில் சிரிப்பை
வீணாக்க நினைப்பதில்லை இந்த மனம்

வலியோடு வாழ்க்கை வரமறுத்து
வலுகட்டாயமாய் நகர்ந்தாலும்
அந்த நகர்வின் சிற் சிறு மகிழ்ச்சிகளை
தேடி மகிழாமல் விடுவதில்லை இந்த மனம்

மணி நேரமெல்லாம் மரண வழியாக
தோன்றினாலும் ஒரு நிமிடம் மலரின்
முக மலர்சியாய் சிரித்து மகிழும் இந்த மனம்

தன்னம்பிக்கையோடு தைரியமாய்
விடாமுயற்சியோடு தன் பாதை நோக்கி
பயணத்தை தொடரும் இந்த மனம்
சில நேரம் என்னையே பெருமை பட வைக்கிறது.

....கவியாழினிசரண்யா...

எழுதியவர் : ...கவியாழினிசரண்யா... (14-Sep-14, 2:03 pm)
பார்வை : 151

மேலே