வசந்த நிலா - சுயவிவரம்
(Profile)
வாசகர்
இயற்பெயர் | : வசந்த நிலா |
இடம் | : தஞ்சை |
பிறந்த தேதி | : 28-Dec-1995 |
பாலினம் | : பெண் |
சேர்ந்த நாள் | : 10-Sep-2015 |
பார்த்தவர்கள் | : 563 |
புள்ளி | : 18 |
俳句 - ஹைக்கூ குறுங் கவிதைகள் விழா
நாளை நம்மை ஹைக்கூ பூந்தோட்டத்திற்கு அழைத்துச் செல்பவர்:
திரு. ஜின்னா
வாருங்கள் ஹைக்கூ சுவை அருந்த...
இத்தொடரில் பங்கேற்பவர்கள் பட்டியல் ( முகப்புப் படம்* / தேதி / இதுவரை link/ இனிவருபவர்கள் )
முரளி(தொடர் ஒருங்கிணைப்பில் உதவி )
பி.கு.:
வினாக்கள், விவரங்கள், விளக்கங்கள்
* முகப்புப் படம் தரவிறக்கம் செய்வதில் ஏதேனும் சிரமம் இருந்தால் உடன் இந்த எண்ணத்தில் கருத்தில் தெரிவிக்கவும்.
முன்னுரை
------------------
1.முதன்முதலாக ஹைக்கூ படைக்கிறேன் ,திரு.ஜின்னா அவர்களுக்கு நன்றி
2.ஹைக்கூ வகைமைப்படி 5,7,5 அசை மாறாமல் எழுத முயற்சித்திருக்கிறேன்
3.எழுதவில்லை பிரசவித்த கவிதைகள் இது !!
நடமாடும் நதிகள் -8
--------------------------------
முன்பனிக் குளிர்
தனித்து மேய்கிறது
அழகு மயில்
நேற்றுவரையில்
சாலையில் இருந்தது
ரத்தச் சுவடு
கிராமப்புற
குட்டிச் சுவர்களெங்கும்
குருட்டாந்தைகள்
பழங்களோடு
தள்ளுவண்டி தெருவில்
நிலா நேரத்தில்
முதிர் கன்னியின்
இறுதி யாத்திரையில்
ஆண்கள் பட்டாளம்
மரத்தூள் எழும்
புழுதிக் காற்றினூடே
சின்ன இறகும்
அல
வெள்ளைக் காகிதம்
***************************
சூரியனுக்குக் கீழ்
ஒரு வெள்ளைக் காகிதத்தை
விரித்து வைத்திருக்கிறேன்
கொல்லப்பட்ட ஒரு மரத்தின் ஆவி
கடந்துபோவதைப் போல
காற்றில் அது
தானாகப் படபடக்கிறது
அதில்
ஒரு கழுகின் நிழல் விழுகிறது
கூடிழந்த பறவைகளின் எச்சம் தெறிக்கிறது
இந்த வெள்ளைத் தாளில்
சுதந்திரமாக
காதல் கடிதம் எழுதிக்கொள்ள
ஒரு பெண்ணிடம் தரலாம்
காதலின் பொருட்டு
அவள் முகத்தில்
திராவகம் வீசப்பட்டால்
நான் என்ன செய்ய முடியும்?
ஒரு விவசாய நிலத்தின்
பச்சை நிறத்தைத் தீட்டலாம்
அதன் கீழ்
புதைக்கப்பட விருக்கும்
மீத்தேன் வாயுக் குழாய்கள் வெடித்தால்
நான் என்ன செய்ய முடி
நடமாடும் நதிகள்.....பகுதி 2
>>>>>>>>>
முன்னுரை:
"நடமாடும் நதியொன்றை
கைகளில் அள்ளினேன்
விரலுக்கொன்றாய் நதிகள்"
.......அப்படி அள்ளியதில் கிடைத்த,
என் பத்து விரல்களின் வழியே பாயும் நதிகளைத்தான் காட்சிப் பிழைகள் (இன்றி/உடன்)
திசைக்கொன்றாய் கீழே வெவ்வேறு பெயர்களில் உலவ விட்டிருக்கிறேன்....
வாருங்கள் நதியாடுவோம்.....
1.கோனாகி
~~~~~~~~~~
இன்னுமா கண்டறியவில்லை
மந்தையில் தொலைந்த என்னை
எக் கடவுளும்.
*********
2. கருவாகி
~~~~~~~~~~
அப்பா அம்மாவுக்கான எழுத்தில்
வைக்க முடியவில்லை
ஒரேயொரு முற்றுப்புள்ளி....
******
3.ஊனாகி
~~~~~~~~~~
நூறு முத்தங்கள் தரு
நடமாடும் நதிகள்.....பகுதி 2
>>>>>>>>>
முன்னுரை:
"நடமாடும் நதியொன்றை
கைகளில் அள்ளினேன்
விரலுக்கொன்றாய் நதிகள்"
.......அப்படி அள்ளியதில் கிடைத்த,
என் பத்து விரல்களின் வழியே பாயும் நதிகளைத்தான் காட்சிப் பிழைகள் (இன்றி/உடன்)
திசைக்கொன்றாய் கீழே வெவ்வேறு பெயர்களில் உலவ விட்டிருக்கிறேன்....
வாருங்கள் நதியாடுவோம்.....
1.கோனாகி
~~~~~~~~~~
இன்னுமா கண்டறியவில்லை
மந்தையில் தொலைந்த என்னை
எக் கடவுளும்.
*********
2. கருவாகி
~~~~~~~~~~
அப்பா அம்மாவுக்கான எழுத்தில்
வைக்க முடியவில்லை
ஒரேயொரு முற்றுப்புள்ளி....
******
3.ஊனாகி
~~~~~~~~~~
நூறு முத்தங்கள் தரு
நான் அரிக்கேன் விளக்கு !
லாந்தர் என்று எனக்கு ஒரு பெயர் உண்டு..
இருப்பினும் புயல்வந்தாலும் அணையாததால்
ஆங்கிலேயன் எனக்கிட்ட பெயர்
அரிக்கேன் விளக்கு !
பொழுது சாயும் வேளையில்
கிராமத்துத் திண்ணைகளில்
என் கண்ணாடி கவசத்தை
கரிபோகத் துடைத்துக் கொண்டிருக்கும்
பாட்டிமார்களை வேடிக்கை பார்த்த
அந்த அரை நூற்றாண்டுக்கு
முன்னர் பிறந்த பெயரன்கள்
என்னோடு நன்கு பரிச்சயப் பட்டவர்கள் !
போன பிறந்தநாளுக்கு
நட்சத்திர உணவு விடுதியில்
எனது போலிகளை அலங்கார
விளக்காய் பார்த்த உங்கள்
இன்றைய பேரன் என்னை
கூகுளில் தேடிக் கொண்டிருக்கலாம் !
பொள்ளாச்சி சந்தைக்கு
நெல்மூட்டை ஏற்றி அசைந்து
நான் அரிக்கேன் விளக்கு !
லாந்தர் என்று எனக்கு ஒரு பெயர் உண்டு..
இருப்பினும் புயல்வந்தாலும் அணையாததால்
ஆங்கிலேயன் எனக்கிட்ட பெயர்
அரிக்கேன் விளக்கு !
பொழுது சாயும் வேளையில்
கிராமத்துத் திண்ணைகளில்
என் கண்ணாடி கவசத்தை
கரிபோகத் துடைத்துக் கொண்டிருக்கும்
பாட்டிமார்களை வேடிக்கை பார்த்த
அந்த அரை நூற்றாண்டுக்கு
முன்னர் பிறந்த பெயரன்கள்
என்னோடு நன்கு பரிச்சயப் பட்டவர்கள் !
போன பிறந்தநாளுக்கு
நட்சத்திர உணவு விடுதியில்
எனது போலிகளை அலங்கார
விளக்காய் பார்த்த உங்கள்
இன்றைய பேரன் என்னை
கூகுளில் தேடிக் கொண்டிருக்கலாம் !
பொள்ளாச்சி சந்தைக்கு
நெல்மூட்டை ஏற்றி அசைந்து
அன்பே...
என்னை முதன் முதலில்
நேசித்தவளும் நீதான்...
என்னில் முதன்முதலில்
நான் சுமந்தவளும் நீதான்...
பாதை இல்லாத கானகத்தில்
திசை தெரியாத பறவை நான்...
துடிக்கும் என் இதயம்
ஊமையாகிவிட்டது...
நீ என்னை
அந்த பிரிந்த நிமிடம்...
வலிகளோடு சொல்கிறேன்...
முயற்சி செய்தும் முடியவில்லையடி
உன்னைவெறுக்க...
உன்னை நேசித்திருந்தால்
நான் மறந்திருக்கலாம்...
உன்னை நான் சுவாசிக்கிறேனடி
எப்படி மறக்க முடியும் உன்னை...
என்னோடு நீ வாழவேண்டாம்
என் இதயத்தில் நீ வாழ்ந்துவிடு...
நான் வாழும்வரை
என் வாழ்விற்கு அதுபோதுமடி...
உதிர்ந்துவிட்ட
என் வாழ்வில்...
உன்
முள்ளை தூங்கவைத்து
பூக்களை திருடும்
நீதான் என் தோட்டக்காரன்
உனது கைகளால் நீர் ஊற்றி
நீயே அறுவடை செய்தாய்
காதலின் மீதான
என் நம்பிக்கை
உன் கண்களில்
இருந்தே துவங்கியது
காலம் செய்த
வெற்றிடங்களை
காதல் உன் நினைவுகளால்
நிரப்பியது
இன்றைக்கொடுத்து
நேற்றென சொல்லவைத்தாய்
நாளையும் கொடுப்பாய்
இன்றையை நேற்றாக்க
நேசங்களை புகுத்தி
தேசங்கள் கடந்தவனே
ஒன்று மட்டும்
சொல்கிறேன் கேள்
நீ வந்தால்
காம்பில் கனமாகி இருப்பேன்
வாராது போனால்
கல்லறையில்
பிணமாகியிருப்பேன்.
மான்தான்
புல்லைமேயும்.
புல்லைப்போன்ற
மீசையோடு
நீ..
இந்த மானை மேய்கிறாய்..!
உண்மை அழுது கொண்டிருந்தது
அதன் விழிநீரை
பெருந்தாகம்கொண்டு
பருகுகிறது பொய்கள் கூடி.!
நிரபராதி சிறைக்குள் இருக்கவும்
குற்றவாளி விடுதலையாகவும்
சட்டம் அதன் கடமையைச் செய்யும்.!
உண்மை
அதன் உண்மையோடும்
பொய்
உண்மையின் சாயலோடும்
இருக்கிறது.!
சூதுகளால்
கவ்வப்பட்ட வாய்மை
அன்றும் இன்றும்
காயம் பட்டுக்கிடக்கிறது.!
ஏறிமிதித்து
முன்னேறிப்போனது
காந்தியின்
கடைசி ஊர்வலம்.!
வாய்மை வெல்லும் என
இன்னும்
நானும் நீங்களும்
நம்பியிருக்கிறோம்..!
இளமையில் யாரும்
அறியா இரவொன்றில் என்
கால்கொலுசின்
பரல்களில் இருந்தே
துவங்கினாய் உனது லீலையை..!
நான் நரை கூந்தல்முடிந்த
ஒரு பிந்தைய பகலில்
உச்சி முகர்ந்தே..
உறங்கியிருந்தாய்..
எனதருகில் ஒரு குழந்தையென.!
காதல்!
இந்த ஒற்றை வார்த்தை
முகம் மூடப்பட்டு
தீ மூட்டப்படும் வரை
பூப்பூக்கவைக்கும்
தேகத்தில்.!