காதலைத்தவிர வேறொன்றுமில்லை
இளமையில் யாரும்
அறியா இரவொன்றில் என்
கால்கொலுசின்
பரல்களில் இருந்தே
துவங்கினாய் உனது லீலையை..!
நான் நரை கூந்தல்முடிந்த
ஒரு பிந்தைய பகலில்
உச்சி முகர்ந்தே..
உறங்கியிருந்தாய்..
எனதருகில் ஒரு குழந்தையென.!
காதல்!
இந்த ஒற்றை வார்த்தை
முகம் மூடப்பட்டு
தீ மூட்டப்படும் வரை
பூப்பூக்கவைக்கும்
தேகத்தில்.!