உன் வாசனை

உனைக் கடக்கும் போது
பட்டாம் பூச்சிகள்
வண்ணத்துப் பூச்சிகளாகி
விடுகின்றன...
நீ கடந்த
ஆற்றை யார்
கடந்தாலும் அது
நதியாகி விடுகிறது....
மரங்களின் நிழல்
தேடும் உன் பயணம்
சோலை செய்தே
தொடர்கிறது....
இரவின் கறுமைகள்
உனைக் கவ்வும்
நொடிகளில் நிலவை
பிரசவிக்கின்றன...
வண்ணங்கள் வர்ணமாகும்
நிகழ்வுகள் -நீ
இணைந்து கொண்ட வானவில்...
மழை பெய்யும் நாளில்
உன் தேகம் சிலிர்க்க அது
சாரலாகி, தூறலாகி- உன்
வாசனை நிரப்புகிறது....
கவிஜி