நடமாடும் நதிகள் 2

நடமாடும் நதிகள்.....பகுதி 2
>>>>>>>>>

முன்னுரை:
"நடமாடும் நதியொன்றை
கைகளில் அள்ளினேன்
விரலுக்கொன்றாய் நதிகள்"

.......அப்படி அள்ளியதில் கிடைத்த,
என் பத்து விரல்களின் வழியே பாயும் நதிகளைத்தான் காட்சிப் பிழைகள் (இன்றி/உடன்)

திசைக்கொன்றாய் கீழே வெவ்வேறு பெயர்களில் உலவ விட்டிருக்கிறேன்....
வாருங்கள் நதியாடுவோம்.....

1.கோனாகி
~~~~~~~~~~
இன்னுமா கண்டறியவில்லை
மந்தையில் தொலைந்த என்னை
எக் கடவுளும்.
*********

2. கருவாகி
~~~~~~~~~~
அப்பா அம்மாவுக்கான எழுத்தில்
வைக்க முடியவில்லை
ஒரேயொரு முற்றுப்புள்ளி....
******

3.ஊனாகி
~~~~~~~~~~
நூறு முத்தங்கள் தருவது போல்
தயாராகிறாய்,
ஒரு முத்தத்திற்கே..!
*****


4.உயிராகி
~~~~~~~~~~
கேள்விகளும் அறியா
தலைமுறைக்குப் பிறந்து தவிக்கின்றன குழந்தைகள்
விடைகளோடு.
******

5.மதியாகி
~~~~~~~~

இப்போதெல்லாம் கருத்தில்
முரண்படுகிறான் நண்பன்
என்னைச் சந்தேகிக்கிறேன் நான்.

*******

6.மற்றுமாகி
~~~~~~~~~

அலைகளை அப்போதே
கரையேற்றிவிடுகிறது கடல்
அது தெரியா மனதெனக்கு.
********

7.வானாகி
~~~~~~~~~

வேரினை கருகவும்,
அழுகவும் வைக்கிறது
வேளாண்மைக்குப் பெய்யாத மழை.
*******


8.மண்னாகி
~~~~~~~~~

மரம் நடுதல் தவிர்ப்போர்
மரம் வெட்டுதல் பழகலாமே
சீமைக்கருவேல்.
********


9.விதியாகி
~~~~~~~~

வாழ்ந்த அதிக நாட்களுக்கு
கூடுதலாக வேகிறது
முத்திய ஆடு.
******


10. வாழ்வேன் நான்...!
~~~~~~~~~~~~~~~~~~
வாழ்க்கை என்னை ஏன்
எழுதத் துவங்கவேயில்லை
என் நாட்குறிப்பில்?
******

உங்களுக்கான முன்னுரை:

என்னைக் கடந்துவிட்டன
அள்ளிக் கொள்ளுங்கள் நதியை,
கடலாகும் முன்.


.....ஆண்டன் பெனி

எழுதியவர் : ஆண்டன் பெனி (7-Feb-16, 12:28 am)
பார்வை : 611

மேலே