ஆண்டன் பெனி - சுயவிவரம்
(Profile)
எழுத்தாளர்
இயற்பெயர் | : ஆண்டன் பெனி |
இடம் | : திருச்சி |
பிறந்த தேதி | : 26-Jul-1972 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 24-Nov-2012 |
பார்த்தவர்கள் | : 2238 |
புள்ளி | : 700 |
நான் திருச்சியில் இருக்கிறேன் தொடர்புக்கு... antonbeni123@gmail .com
99430 88022
“மௌனம் கசியும் பாறைகள்”
***************************************
அதிகாலைப் பனிமேடை
குருவிகளின் கூட்டிசையில்
கௌசல்யா சுப்ரபாதம்
*
பச்சைமலைக் காடு
காட்டையே கட்டியிழுக்கிறது
வனவாசியின் கூப்பிடுகுரல்
*
கள்மரத்துப் பானைகளில்
சொட்டுசொட்டாய் வடிகிறது
தோட்டக்காரனின் தாகம்
*
வலையில் சிக்காத கடல்மீன்கள்
சிக்கிவிடுகின்றன
அவர்கள் பாட்டில்
*
யுகங்கள் கடந்துபோய்விடவில்லை
நின்றயிடத்திலிருந்தே வாழ்த்தும்
அருவிகள்
*
மஞ்சள் குருதியில்
மினுங்கும் மேனி
பொன்அந்தி மாலை
*
ஓடைகள் நதிகளாவதை
மலைத்து ரசிக்கின்றன
கசியும் பாறைகள்
*
அமாவாசை
俳句 - ஹைக்கூ குறுங் கவிதைகள் விழா
திருமதி. உமை
வாருங்கள் ஹைக்கூ சுவை அருந்த...
இத்தொடரில் பங்கேற்பவர்கள் பட்டியல் ( முகப்புப் படம்*** /இதுவரை link/ இனிவருபவர்கள் / தேதி )
வினாக்கள், விவரங்கள், விளக்கங்கள்
* முகப்புப் படம் தரவிறக்கம் செய்வதில் ஏதேனும் சிரமம் இருந்தால் உடன் இந்த எண்ணத்தில் கருத்தில் தெரிவிக்கவும்
** வரிசை எண் 25, 34, 46 பெயர்கள் மாற்றம் கவனிக்கவும். (மாற்றம் செய்பவர்கள்: 25.பிரியா ஐசு , 34.நாராயணசாமி ராமசந்திரன், 46.நித்யஸ்ரீ (புதிதாக இணைந்த மூவர், திரு ஜின்னாவிற்கு தனி விடுகையில், உறுதி செய்ய வேண்டுகிறோம் )
ஒவ்வொரு பெண்ணும்
புரிந்துவைத்திருக்கிறாள்
புருவமத்தியில் ஒரு கைக்கூவை.
நல்ல கைக்கூ கிடைப்பது ஒரு வரம்.
என் தவம் இன்னும் முடியவில்லை
இதோ நதிக்கரையில்
நானும் என் கூழாங்கற்களும்..
________________________ 💐💐💐
தவிப்புக்குரலெழுப்பியபடி
தனித்துப்பறந்தது
நாரையொன்று நிலவொளியில்
_________________________
வழியனுப்பும் போதெல்லாம்
வலி தந்து நகர்கிறது
ஒரு பிரியமான சன்னல்.
_______________________
தும்பியின்
சிறகில் கண்டேன்
ஒரு ஜோடி வானம்.
_______________________
கைகட்டியிருந்தால்
சிலுவைகள்
இல்லை.
_____________________
நேற்றிரவு கட்டிக்கிடந்த ஆடு
இன்று பந்தியில் அச
தனக்கெனத் தேர்ந்தெடுத்த பாதையில்
தனித்துவமான வாழ்வியல் தத்துவங்கள் கூறி
எழுத்துத் துளியின் இறுதிச் சொட்டு மை
இருக்கும்வரை தடங்கலின்றிப் பயணிக்கும்
இந்த நடமாடும் நதியின் முதுகில்
சில மிதவைகளாயும் ...
மடியில் சில கூழாங் கற்களாயும்..
அதன் போக்கை நிர்ணயிக்கும் பாதையில்..
அவ்வப் போது தோன்றிய எண்ணங்களை
ஹைக்கூ துளிகளாய் நகர விடுகிறேன்..
இவற்றில் கரையில் ஒதுங்குபவை சில..
கடலுடன் சங்கமிக்கும்
கடை நாழி வரை
நதி வழி தொடர்ந்து வருபவை சில
எனும் நம்பிக்கையுடன்....
****************************************
கல்லறைச் சிறை
கைதியாய் உடல்
ஆன்ம விடுதலை......................
நடமாடும் நதிகள் - 16
----------------------------------------
மொட்டை மாடியில்
ஓய்வெடுக்கிறது
நிலா.
------------------------------------------------------------
வாழ வேண்டும்
சாவைத் தேடுகிறான்
சங்கூதுபவன்.
------------------------------------------------------------
சாலையோர நடை
தலை உரசும் பறவை
விழிக்கிறது மூடநம்பிக்கை.
------------------------------------------------------------
ஓரமாய் ஒதுங்கும் வாகனம்
முதுமை இளமையாய்
மண் குதிரையில் சிறுவன்.
------------------------------------------------------------
நடமாடும் நதி
மூழ்கியெழும்
தினமும் காதலோடே
வீதியில் இறங்குகிறேன்.
சற்று முன் கடந்த இரவிலும்
காதலுக்குள் அணுவணுவாக
நுழைய முற்பட்டபோது
தனிமையான நுழைவை
இனியும் சகிக்கமுடியாது என்று
காதலால் எச்சரித்துத் திருப்பப்பட்டேன்.
நண்பர்கள் எனக்கென்று தந்த
காதல் பயிலரங்கங்களிலும்
எனக்கான காதல் பற்றி எதுவும்
பேசவேயில்லை.
இரவல் கொடுத்த என் கவிதைகளில்
என் காதலின் பெயர்சேர்க்க
விட்டிருந்த இடங்களில்
வேறோர் பெயர் சேர்த்து
முன்மெழியப்பட்ட பின்
அதுவும் எனக்கில்லை என்றானது.
நினைவிலும்
நெஞ்சிலும்
நேசத்திலும்
சுவாசத்திலும்
எவரும் கொண்டாடும்
ஒரு காதலையே
நான் வைத்திருக்கிறேன்
எப்போது எதிர்ப்படுவாய் நீ?
…...ஆண்டன் ப
எதிர் வீட்டு மாரியண்ணனின் ஆட்டை
அவர் மடியிலும், தோள்களிலுமே பார்த்திருக்கிறேன்,
ஊட்டி ஊட்டி அவர் வளர்த்தாலும்
எக்கி நின்று மேயும் அதன் சுபாவத்தில்
என் வீட்டுச் சந்தடி சோதித்து
வராந்தா செடிகளில் வந்து வாய்வைக்கும்,
அன்று என் அப்பாவின் கண்களுக்கு, ஆடும்
கையின் மரக்கட்டைக்கு, ஆட்டின் காலும்
வசமாக மாட்டிக்கொண்டதால்
பலமான காயமாகிவிட்டது
முந்தைய பிராது நிறைய இருந்ததால்,
மாரியண்ணன் ஆட்டைத்தான் கடிந்துகொண்டார்.
முன்தொகை கொடுத்து விலை பேசிப்போன
கறிக்கடை பாய் வந்த போது
கால்காயத்தைக் காரணம் காட்டி
முன்தொகையைக் கொடுத்து
வேறொரு நாள் வரச் சொல்லித் திருப்பிவிட்டார்
ஆட்டின் க
முன்னுரை:
தனித்தனியாய் நடமாடும்
ஹைக்கூகளை இணைத்தால்
பிறக்கும் ஒரு கதை!
..
பயனின்றி பாயும்
நதிகளை இணைத்தல்
நாட்டின் வளத்திற்கு விதை !
..
நதிகளின் கரைகளில் சற்றே உலவிட உங்களை அன்புடன் அழைத்திடும்
- கருணா
*******************
நடமாடும் நதிகள்!
*******************
கவிகின்றது இருள் !
கூடு திரும்பும் பறவைகள் -
மரத்தில் பாம்பு !
..
கள்ளுண்ட வண்டு!
காய்ந்த மாடு - நொறுங்குகின்றன
கண்ணாடி வளையல்கள் !
..
ஆதாமின் குற்றத்திற்கு
நாட்டாமை தீர்ப்பு - கடன்
வாங்கி கல்யாணம்!
..
வறண்ட பூமியில்
விதியின் யுத்தம் - கண்ணீரில்
எதிர் வீட்டு மாரியண்ணனின் ஆட்டை
அவர் மடியிலும், தோள்களிலுமே பார்த்திருக்கிறேன்,
ஊட்டி ஊட்டி அவர் வளர்த்தாலும்
எக்கி நின்று மேயும் அதன் சுபாவத்தில்
என் வீட்டுச் சந்தடி சோதித்து
வராந்தா செடிகளில் வந்து வாய்வைக்கும்,
அன்று என் அப்பாவின் கண்களுக்கு, ஆடும்
கையின் மரக்கட்டைக்கு, ஆட்டின் காலும்
வசமாக மாட்டிக்கொண்டதால்
பலமான காயமாகிவிட்டது
முந்தைய பிராது நிறைய இருந்ததால்,
மாரியண்ணன் ஆட்டைத்தான் கடிந்துகொண்டார்.
முன்தொகை கொடுத்து விலை பேசிப்போன
கறிக்கடை பாய் வந்த போது
கால்காயத்தைக் காரணம் காட்டி
முன்தொகையைக் கொடுத்து
வேறொரு நாள் வரச் சொல்லித் திருப்பிவிட்டார்
ஆட்டின் க
நடமாடும் நதிகள்.....பகுதி 2
>>>>>>>>>
முன்னுரை:
"நடமாடும் நதியொன்றை
கைகளில் அள்ளினேன்
விரலுக்கொன்றாய் நதிகள்"
.......அப்படி அள்ளியதில் கிடைத்த,
என் பத்து விரல்களின் வழியே பாயும் நதிகளைத்தான் காட்சிப் பிழைகள் (இன்றி/உடன்)
திசைக்கொன்றாய் கீழே வெவ்வேறு பெயர்களில் உலவ விட்டிருக்கிறேன்....
வாருங்கள் நதியாடுவோம்.....
1.கோனாகி
~~~~~~~~~~
இன்னுமா கண்டறியவில்லை
மந்தையில் தொலைந்த என்னை
எக் கடவுளும்.
*********
2. கருவாகி
~~~~~~~~~~
அப்பா அம்மாவுக்கான எழுத்தில்
வைக்க முடியவில்லை
ஒரேயொரு முற்றுப்புள்ளி....
******
3.ஊனாகி
~~~~~~~~~~
நூறு முத்தங்கள் தரு
அனுபவம் அல்லது உணர்ச்சி கடத்தல் ஹைக்கூ..ஒரு சில வார்த்தைகள்மூலம்,
நள்ளிரவில்
தூரத்தில் ஒரு கதவு
இழுத்து சார்த்தப்பட்டது.
உடனே பார்க்கும்போது இந்த மூன்று வரிகள் ஒரு நிகழ்ச்சியைவிவரிக்கும் வெறும் வரிகள்தாம். ஆனால் சற்றே சிந்திக்கையில் இதன் பரிமாணங்கள்விரிவதை கவனிக்க முடியும். நள்ளிரவு இந்த வரிகளை எழுதியவன் விழித்திருக்கவேண்டும். அவன் தனிமை வெளிப்படுகிறது. அவனுக்கு ஏன் தூக்கம் வரவில்லை? கவலையா? தனிமையா? உடல் நலமில்லையா? எங்கே இவன்விழித்திருக்கிறான்? நகரத்திலா, கிராமத்திலா? நகரத்தில் இருக்க முடியாது,அத்தனை நிசப்தம் நகரத்தில் எது? தூரத்தில் கதவுசாத்தப்படும் சப்தம் கேட்க முடிகின்ற நிசப்தம்,அந்த சப்தத்தின் அர்த்தம் என்ன? அந்த வேலைக்குவீட்டுக்கு வந்தது யார்? ஒரு தகப்பனா, ஒரு மனைவியா, ஒரு மகனா, வயசுக்கு வந்த பெண்ணை?அல்லது யாராவது கோபத்தில் வீட்டை விட்டு வெளியேசெல்கிறார்களா?
மூன்றே மூன்று வரிகள். அவை ஏற்படுத்தும் சலனங்கள் எத்தனைபாருங்கள். உங்கள் சிந்தனை என்னும் ஜலப்பரப்பில் எறியப்படும் சிறியகல் ஹைக்கூ.