ஆண்டன் பெனி- கருத்துகள்

கருத்திடுவது சுலபம் (உலகம் சுழன்றும்)...
எழுது "வதை" விடவும்....

கைகட்டியிருந்தால்
சிலுவைகள்
இல்லை.

...............அழகு தம்பி. இங்கு சிலுவைகள் மாற்றுக் கருத்துகளுக்கும்
மாற்று எண்ணங்களுக்குமே தயாராகின்றன. கையை விடுவித்தால் உயிருக்கு உத்திரவாதம் இல்லை.
அருமை தம்பி

தூண்டிலிட்டதும்
சிக்கிவிடுகிறது
குளம்.
ஆமாம்ப்பா...ஆமாம்...
இங்கு தூண்டில்கள் மீன்களுக்காகப் போடப்படுவதில்லை குளத்திற்காகத்தான்

வழியனுப்பும் போதெல்லாம்
வலி தந்து நகர்கிறது
ஒரு பிரியமான சன்னல்.

உனக்கும் எனக்கும் தான் இது போல வரும்... என்னத்தைச் சொல்ல...?

நல்லா இருக்கு தம்பி உன் ஏக்கம்...

இயற்கையோடு இணைந்து செல்லும் உங்கள் ஹைக்கூப் பயணம்
வெகு சிறப்பு தோழமை.

புறவெளிப் பூஜ்ஜியம்
அகம் நிர்வாணம்
ஆன்மத் தரிசனம்.

சாலையோர நடை
தலை உரசும் பறவை
விழிக்கிறது மூடநம்பிக்கை.


பறையொலிக்கும் ஓசை
கருகிய மொட்டுக்கள்
உறக்கத்தில் ரெளத்திரம்.

அழகு குமரேசன்... வெகு மென்மாயாக... அதே நேரத்தில்
அழுத்தமாக காட்சிப்படுத்தியுள்ளாய் தம்பி

ஓரமாய் ஒதுங்கும் வாகனம்
முதுமை இளமையாய்
மண் குதிரையில் சிறுவன்.... இளமையில் முதுமையாய் உன் படைப்பு வாழ்த்துகள் தம்பி

நடக்க நடக்கத்
தெரிந்து மறைந்தும் போகிறது
கானல் நீர்

சிறுவன் கையில்
சிறிய கண்ணாடித் துண்டு
சுவற்றில் சூரியநடனம்

அழகாக தெளிந்த நீரோடையாகப் பயணிக்கிறது
ஹைக்கூ... கள். அருமை நண்பரே

குளத்தைக் குடித்த மாடி
மூடிய தொட்டி
கரையும் காக்கா

எல்லாம் அருமை எனினும்... தற்காலச் சூழலை...
வெகு நேர்த்தியாக... கோபத்தின் அழகான வெளிப்பாடாக
காட்டுகிறது.
அருமை சார்.

நன்றி : வெகு சிறப்பான ஒருங்கிணைப்பாளர்; திரு.முரளி சார் அவர்களுக்கும் (விட்டுப்போயிருக்கு)

ஊனமாகாத அருவி, துடிக்கிறது நிலவு , அடக்கம் செய்யப்படும் திறமைகள்,இறங்கும் படிகள்.. என அழகாகப் பயணிக்கிறது ஹைக்கூ.

வாழ்த்துகள்

ஆழமான இலக்கியத்திற்கும்...ஆழ்ந்த சிந்தனைக்கும் வாழ்த்துக்கள் மணி
வெகு சிறப்பு

சட்சட்டென அடித்து
அடிவாங்கியது போல் அழுதது
ஆலங்கட்டி மழை

போட்டால்தான் கிடைக்கும்
பிரசாதமாய் பூவும் கனியும்
தட்டில் காணிக்கை

அழகு அருமை... வாழ்த்துகள் அம்மா

மிக்க நன்றிகள் கவின். தங்களின் மேலான கருத்துக்கும் வருகைக்கும்

மிக்க நன்றிகள் மனோ... வருகைக்கும் கருத்துக்கும்

பெண்ணியம் பற்றி.... சற்று ஆசுவாசப்படுத்தியபின் பேசுவோம்...

எல்லா அடர்வனங்களிலும்
வழிதவறாது
பயணித்து விடுகிறது
ஒற்றையடிப் பாதை...

ஒற்றையடிப்பாதை ஒரு தலைக் காதலாகவும்,
திரும்பவே அனுமதிக்காத நேர் உழைப்பாகவும் போய்க்கொண்டேயிருக்கிறது


*****
நாங்களே இறங்கி விலகி
வாய்க்கவேயில்லை முழுவதுமாய்...
ஒற்றையடிப் பயணம்.
*****

என்றாவது ஆள்அரவமற்ற ஒரு நாளில்...
என் ஊர்வரை முழுவதுமாக நடந்துவிடவேண்டும்.... அந்த ஒத்தையடிப்பாதையில்...

விலகி வழி கொடுப்பது தவறில்லை... அது எனக்கான கட்டாயம் என்பதுதான்....

உயர்சாதி மனிதனுக்குள்
ஓடிக் கொண்டிருக்கிறது
ஒடுக்கப் பட்டவனின் ரத்தம்

எப்படி?
அவன் உழைப்பில் உயர்ந்ததால் கிடைக்கப்பெற்ற ரத்தமா?
அவன் உழைப்புக்கு ஏற்ற ஊதியம் மறுக்கப்பட்டு அவனுக்கான எஞ்சிய பணத்தில் கிடைக்கப்பெற்ற ரத்தமா?
ரத்தத்தேவையில் இனம் பார்க்காமல் பெற்றுக்கொண்ட ரத்தமா?

எங்கு எப்படி ஓடினாலும்

இருவருக்குமான இரத்தின் நிறத்தை
ஏதோ ஒரு மறதியில் ஒன்றுபோலாக்கிய
கடவுளுக்கு நன்றி.

மிக்க நன்றிகள் மனா. தங்களின் மேலான கருத்துக்கும் வருகைக்கும்

இங்கே புதியகோடங்கியின் ஒரு கவிதைதான் நினைவுக்கு வருகிறது.....

*ஏதேனும் விதிமுறை வைத்திருந்தால்
தூரமாகப் போய்விடுங்கள்
விளையாடட்டும் குழந்தைகள்*

நேற்றுவரையில்
சாலையில் இருந்தது
ரத்தச் சுவடு

இது காவியம்...

இன்று இல்லை அந்த ரத்தச்சுவடு
என்னவாகியிருக்கும்... சக்கரங்களில் மேலும் மேலும் சிதைந்து காணாமல் போயிருக்கும்

உறவுகளின் நினைவுகளிலிருந்து மறைந்து போயிருக்கும்

இதற்கும் பிறகு எதெற்கு என்று ஒரு மழை வந்து எடுத்துப்போயிருக்கும்

இங்கே ரத்தம் என்பது அடையாளம்
இங்கே ரத்தம் என்பது நினைவுகள்
இங்கே ரத்தம் என்பது காட்சிகள்
இங்கே ரத்தம் என்பது உணர்வுகள்

எல்லாம் நேற்றுவரை இருந்தது இங்கே

அழகு சுஜய் வாழ்த்துகள்.


ஆண்டன் பெனி கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com



புதிதாக இணைந்தவர்

மேலே