நடமாடும் நதிகள் 19 - முரளி

வட்ட நிலா சன்னலில்
பால் குடிக்கும் பாப்பா
கால் உதைத்த பந்து
------------------------------------------

புலரியில் சீருடை
கூன்முதுகுப் பூமுகம்
பூச்சுக் கலைக்காத் துயில்
-----------------------------------------

பூட்டிய வீடு
ஜன்னல் தட்டிச் செல்லுது
புறாவும் அணிலும்
----------------------------------------

கரை புரண்ட வெள்ளம்
கடலில் நுரைதள்ள
தண்ணீர்! தண்ணீர்!
----------------------------------------

குளத்தைக் குடித்த மாடி
மூடிய தொட்டி
கரையும் காக்கா
----------------------------------------

பூக்கள் கனிகள் உயிர்மூச்சு
தந்தும் ஓரிடம்
அலையும் மனிதன்
----------------------------------------

பச்சைப் புல்வெளி
ஒற்றையடிப் பாதை
மனிதக் காலடி வீரியம்
-----------------------------------------

தோலுரிக்க சீர்திருத்த
சாட பொங்க நிரந்தரம்
சமூக அவலங்கள்
-----------------------------------------

சீறும் வாகனம்
கவசம் நுழைக் கைப்பேசி
காதருகில் சங்கொலி
----------------------------------------

தலையாட்டல் ஓங்குகுரல்
உரத்தநகை சைகைகள்
நடக்குது கைப்பேசி நாடகம்

----- முரளி
------------------------------------------------------------------------------
இவர்கள் இன்றி இல்லை இந்த நதி:

திரு ஜின்னா: ஆக்கம், அமைப்பு, ஊக்கம்
திரு கமல் காளிதாஸ்: கவின்மிகு முகப்புப் படம்
திரு ஆண்டன் பெனி: படத்தில் தனிப் பெயர் அமைப்பு
உற்சாகமாகப் பங்குபெறும் தோழமைகள்
தொடர்ந்து வாசித்து ஊக்கம் தரும் அன்புத் தோழமைகள்

எழுதியவர் : முரளி (24-Feb-16, 12:31 am)
பார்வை : 701

மேலே