நடமாடும் நதிகள் - 14 - சொ சாந்தி

நடமாடும் நதிகள் - 14 - சொ. சாந்தி
=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-

"ஆணவம்பிடித்தவர்" குற்றச்சாட்டுகளில்
அடக்கம் செய்யப்படுகிறது
திறமைகள்..!!  (1)
=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=

ஏறிக்கொண்டே இருக்கிறேன்
இறங்கிக்கொண்டே இருக்கிறது
படிகள்..!!  (2)
=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=

உயரத்திலிருந்து விழுந்தாலும் ஊனமாவதில்லை
உற்சாகமுடன் ஓடுகிறது
அருவி..!!  (3)
=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=

தடுமாற்றத்துடன் ஓடுகிறது
வாகனம்
போதையில் வாகன ஓட்டி..!! (4)
=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=

துடிக்கிறது நிலவு
கடித்துவிட்டது
குளத்து மீன்..!!  (5)
=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=

கட்டில் மட்டும்தான் இருந்தது
தொட்டில் இல்லை
குப்பைத்தொட்டியில் குழந்தை..!!  (6)
=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=

துணையாக வந்தது நிழல்
விரட்டி அடித்தது
கும்மிருட்டு..!!  (7)
=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=

ஆடை குறையக் குறைய
அதிகரித்துக்கொண்டே இருக்கிறது
நடிகையின் சம்பளம்..!!  (8)
=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=

கையில்லாத இரவிக்கை அணிந்து
கடைத்தெரு வந்தாள்
கை வைத்தான் காலிப்பயல்..!!  (9)
=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=

கற்பழிக்கப்பட்டவளை
கடலுக்கும் பிடிக்கவில்லை
ஒதுக்கித்தள்ளுகிறது அலைகள்..!!  (10)
=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=

நன்றியுரை :
-------------------
நடமாடும் நதிகள்
ஆர்ப்பரித்து ஓடிக்கொண்டிருக்கிறது
ஜின்னா அமைத்த பாதைகளில்..!!

நதியின் ஓட்டத்திற்கு
ஓர் வடிவம்
அழகாய் மிளிர்கிறது
கமல் காளிதாஸ் கைவண்ணத்தில்... !!

நதியின் ஓட்டத்தில்
அள்ளிப்பருக திணற வேண்டாம்
எடுத்து எடுத்துக் கொடுக்கிறார்
அப்படியே தாகம் தணிக்கலாம்
முரளி அவர்களின் சேவையில்...!

எந்த நதி யாருடையது
கேள்வியே வேண்டாம்
இதோ அத்தனை நதிகளுக்கும்
செதுக்கப்பட்ட பெயர்களில்
ஆண்டென் பெனி அவர்களின்
பெயர் பொறிப்புகளில்..!!

எத்தனை நதி வேண்டுமானாலும்
ஓடவிட்டுக்கொள்ளுங்கள்
இடத்தை நாங்கள் தருகிறோம்
தாராள மனம் கொண்ட
எழுத்துத் தளத்தார்...!!

அனைவருக்குமாய்
என் கரம் கூப்பிய நன்றிகள்..!!

எழுதியவர் : சொ. சாந்தி (19-Feb-16, 8:19 am)
பார்வை : 786

மேலே