நடமாடும் நதிகள் 12

(1)
இறைவன் மீட்டும் இசை
என்றும் எங்கள் பாட்டுக்கு
தலைக்குமேல் தண்டவாளம்
(2)
வண்டுவிழி நின்று
பூவிலே தேன்மது தேடியது
வாசலிலவள் கோலம்
(3)
மறுபடி பெய்யும் மழை
மறுபடி மறுபடி காளான்கள்
மறதி மிக்கது மண்
(4)
பசி தீர்க்கும் படர்ந்து
பசுமை உயர்த்தும் கொடிக்கம்பம்
பழமையென்றது விரல் மை
(5)
ஒரு வானம் ஒரு நிலா
உலகே நீ ஏழை பாராய்
கிடுகுக்குள் ஆயிரம்
(6)
தீண்ட இயலாமல்
தீயும் தோற்கும் பலம்கொண்டநீர்
அதுவே அச்சாம்பல்
(7)
விட்டுப் போனது அதில்
உயரே பொட்டு மறந்தது மெய்
உயிர்மெய் என்பது காண்
(8)
சிதறியது தேங்காய்
சிலையேறப் புறப்பட்டது தேர்
ராட்டினங்களில் சாமி
(9)
முடிந்ததோர் அத்தியாயம்
முகப்புவாரத்தில் தொடர் துளிகள்
வருமென்கிறது மழை
(10)
பனஞ்சுவடிக் கணக்கு
பச்சைசெலவு பழுத்தது வரவு
பற்றறிந்து கட உள்

... மீ.மணிகண்டன்

**********************************************************************************************
5, 7, 5 அசைகளில் புனைய முனைந்த ஹைக்கூக்கள், தவறுகளைச் சுட்டுங்கள் தமிழ்வாழச் செய்யுங்கள் ... நன்றி
**********************************************************************************************

என்றென்றும் நன்றி...
திரு ஜின்னா (தொடர் தொகுப்பாசிரியர்)
திரு கமல் காளிதாஸ் (முகப்பட வடிவமைப்பு)
திரு முரளி T N (தொடர் ஒருங்கிணைப்பு)
திரு ஆண்டன் பெனி (முகப்பட பெயர் செதுக்கல்)

எழுதியவர் : மீ.மணிகண்டன் (17-Feb-16, 8:44 am)
பார்வை : 457

மேலே