எத்தனை பேர்?

🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩

*அரசியல்*

படைப்பு *கவிதை ரசிகன்*
குமரேசன்

🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩

அரசியல்
ஒரு "சாக்கடை" என்று
மக்களே !
நீங்களே சொல்லிவிட்ட பிறகு
அதில்
இருப்பவர்கள்
"கொசுக்களாக" தானே
இருக்க முடியும்....

இவர்களுக்கும்
நாட்டைக் காப்பாற்ற
ஆசைதான்
என்ன செய்வது ?
பாவம்
அவர்களுக்கு
கட்சியைக் காப்பாற்றவே
காலம் சரியாக இருக்கிறதே...!

பணத்திற்காக
பணக்காரர்களே
செய்யும் ஆட்சி
பணநாயக ஆட்சி....

வெள்ளை சட்டை
அணிந்த
கருப்பாடுகள்.....

இவர்கள்
பிச்சை போட்டவர்களையே!
பிச்சைக்காரர்களாக்கும் மந்திரவாதிகள் அல்ல
தந்திரவாதிகள்...

ஆளுங்கட்சியாக இருந்தாலும் எதிர்க்கட்சியாக இருந்தாலும்
இவர்கள்
போடும் திட்டங்கள் எல்லாம்
நாட்டை
முன்னேற்றுவதற்காக அல்ல
நாட்டு மக்களை
ஏமாற்றுவதற்காகவே......

இவர்களின் வார்த்தைகள்
அமுதம் பூசப்பட்ட
நஞ்சு...

இவர்களின் வாக்கு
கொசு வலை அல்ல
மீன் வலை.....

குறையானதை
குறை சொல்லிக்கொண்டே !
இருப்பதை விட
நிறைவானதைக் கொண்டு
அந்த இடத்தை
நிறைப்பது
அறிவுடைமையாகும் அல்லவா!

மருத்துவராவேன்
பொறியாளராவேன்
வழக்கறிஞராவேன்
காவலராவேன்
ஆசிரியராவேன் என்று
எத்தனையோ மாணவர்களை
சொல்ல வைத்தீர்கள்....
இனி
எத்தனை மாணவர்களை
சொல்ல வைக்கப் போகின்றீர்
நான்
"அரசியல்வாதியாவேன்" என்று...?

*கவிதை ரசிகன்*

🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩

எழுதியவர் : கவிதை ரசிகன் (18-Dec-24, 9:59 pm)
பார்வை : 4

மேலே