நடமாடும் நதிகள் - 16  _ குமரேசன் கிருஷ்ணன்

நடமாடும் நதிகள் - 16  
----------------------------------------  

மொட்டை மாடியில்
ஓய்வெடுக்கிறது
நிலா.

------------------------------------------------------------

வாழ வேண்டும்   
சாவைத் தேடுகிறான்   
சங்கூதுபவன்.

------------------------------------------------------------

சாலையோர நடை   
தலை உரசும் பறவை   
விழிக்கிறது மூடநம்பிக்கை.   

------------------------------------------------------------

ஓரமாய் ஒதுங்கும் வாகனம்   
முதுமை இளமையாய்   
மண் குதிரையில் சிறுவன்.
   
------------------------------------------------------------

நடமாடும் நதி   
மூழ்கியெழும் மனிதர்கள்   
மிச்சமாய்ப் பாவச்சுவடுகள்.
   
------------------------------------------------------------

சலனமில்லாக் கடற்கரை   
துடுப்புகளில் ரத்தம்  
கரை ஒதுங்கும் பிணங்கள்.
   
------------------------------------------------------------

வாசலில் செய்திதாள்   
மிதிவண்டியில் மாணவன்   
நாளைய தலைப்புச்செய்தி.
   
------------------------------------------------------------

நீள்கின்ற இரவு   
ஒளிர்கின்ற வானம் 
நான்கு கண்கள்.

------------------------------------------------------------

புறவெளிப் பூஜ்ஜியம்   
அகம் நிர்வாணம்   
ஆன்மத் தரிசனம்.

------------------------------------------------------------

பறையொலிக்கும் ஓசை   
கருகிய மொட்டுக்கள்   
உறக்கத்தில் ரெளத்திரம்.
   
------------------------------------------------------------

நன்றி : தொடர் தொகுப்பாசிரியர் திரு ஜின்னா
முகப்பட வடிவமைப்பு : திரு கமல் காளிதாஸ்
தொடர் ஒருங்கிணைப்பு : திரு முரளி T N
முகப்பட பெயர் செதுக்கல் : திரு ஆண்டன் பெனி

அன்புகளுடன்...
குமரேசன் கிருஷ்ணன்

எழுதியவர் : குமரேசன் கிருஷ்ணன் (21-Feb-16, 1:58 am)
பார்வை : 671

மேலே