ஹைக்கூ என நினைத்து கிறுக்கிய சில காதல்

கவிதை எழுதினேன்
அவளிடம் நீட்டி கவிதை
ஆனது பெயர்
விழிகள் உறங்கவில்லை
இதயம் துடித்துக்கொண்டே
கேட்டது என்னிடம்
காதலிக்கு புரியவில்லை
காதல் என்றால் என்ன
இருவர் ஒருவரானால்
கற்க ஆசைப்பட்ட
பாடசாலை அவள் விழியால்
கற்றுக்கொண்டேன் பாடம்
பள்ளியில் தான்
விழித்து கொண்டே படுக்கையிலும்
விழிக்க வைக்கிறாள்
கல்லூரி மரத்தடி
வாழ்க்கை புடுங்கி விட்டாள்
வேரோடு மரம்
கண்கள் பேசும்
பொய் விழி ஈரம்
பேசா மெய்
வார்த்தை வலி
தரும் உன்னால் மௌனத்தின்
வலியில் நான்
(தவறு இருப்பின் மன்னிக்கவும்)