நடமாடும் நதிகள் - 11 சியாமளா ராஜசேகர்

சத்தமின்றி மௌனமாய்
ஒரு முத்தப் போராட்டம்
வலைக்குள் நுளம்பு (கொசு) . 1

சிக்கலில் மாட்டியதோ
கொட்டியதால் மனதில் வலி
சீப்பில் முடி . 2

சட்சட்டென அடித்து
அடிவாங்கியது போல் அழுதது
ஆலங்கட்டி மழை . 3

காதலியைக் கண்டதோ
துள்ளிக் குதித்து ஓடுகிறது
மலையின் அருவி . 4

போட்டால்தான் கிடைக்கும்
பிரசாதமாய் பூவும் கனியும்
தட்டில் காணிக்கை . 5

எதிர்பாரா விபத்து
இடம் மாறியது இதயம்
பூத்தது காதல் . 6

பசுவதைத் தடுப்புவிழா
வந்த சிறப்பு விருந்தினர்க்கு
மாட்டிறைச்சி பிரியாணி . 7

மீசை காரனைக்
கண்டதும் கத்தி வெளிநடப்பு
கிச்சனில்(அடுக்களையில்) கரப்பான் . 8

மின்னிணைப்பு இல்லை
இலவசமாய் உள்ளே வெளிச்சம்
பொத்தல் குடிசை . 9

நடமாடும் நதிகளைப்
பாராட்டிக் கவரி வீசும்
ஆற்றோர நாணல் . 10

மனமார்ந்த நன்றி
````````````````````````````
தொடர் தொகுப்பாசிரியர் :திரு ஜின்னா
முகப்பட வடிவமைப்பு : திரு கமல் காளிதாஸ்
தொடர் ஒருங்கிணைப்பு : திரு முரளி T N
முகப்பட பெயர் செதுக்கல் : திரு ஆண்டன் பெனி

எழுதியவர் : சியாமளா ராஜசேகர் (16-Feb-16, 12:39 am)
பார்வை : 600

மேலே