நடமாடும் நதிகள் -15-உமை
தனக்கெனத் தேர்ந்தெடுத்த பாதையில்
தனித்துவமான வாழ்வியல் தத்துவங்கள் கூறி
எழுத்துத் துளியின் இறுதிச் சொட்டு மை
இருக்கும்வரை தடங்கலின்றிப் பயணிக்கும்
இந்த நடமாடும் நதியின் முதுகில்
சில மிதவைகளாயும் ...
மடியில் சில கூழாங் கற்களாயும்..
அதன் போக்கை நிர்ணயிக்கும் பாதையில்..
அவ்வப் போது தோன்றிய எண்ணங்களை
ஹைக்கூ துளிகளாய் நகர விடுகிறேன்..
இவற்றில் கரையில் ஒதுங்குபவை சில..
கடலுடன் சங்கமிக்கும்
கடை நாழி வரை
நதி வழி தொடர்ந்து வருபவை சில
எனும் நம்பிக்கையுடன்....
****************************************
கல்லறைச் சிறை
கைதியாய் உடல்
ஆன்ம விடுதலை..........................1
*****************************************
அசுத்தக் காற்று
ஆகாயத்தில் காயம்
மூர்ச்சையாகும் பறவைகள்...........2
*******************************************
கூட்டுப் பறவைகள்
குறை காணாக் கண்கள்
சுகமான சுமைகள் .............................3
**********************************************
ஒருவழிப் பயணம்
பல வழித் தடங்கள்
சுயசார்பு வாழ்க்கை ..........................4
***********************************************
வேடந்தாங்கல்
இரையான பட்சிகள்
காவலாளி பசியில் ..................................5
****************************************************
கம்பி மேல் பறவை
கடத்தப்படும் மின்சாரம்
புலனாகா மரணம் ..................................6
*******************************************************
கசப்புக் குவளை
உவர்ப்புக் கரைசல்
முதுமை தனிமையில்..............................7
********************************************************
சிதறும் சிப்பிகள்
சேர்க்கும் கரைகள்
அலைகளின் கனவு......................................8
*********************************************************
உறைபனிக் காலை
உருமறைப்பில் மரங்கள்
கிளைகளில் முகில்கள்.................................9
***********************************************************
எண்ணத் தூரிகை
வண்ண நிறங்கள்
முதல் ஓவியம்..................................................10
**************************************************************
மனமார்ந்த நன்றி
````````````````````````````
தொடர் தொகுப்பாசிரியர் :திரு ஜின்னா
முகப்பட வடிவமைப்பு : திரு கமல் காளிதாஸ்
தொடர் ஒருங்கிணைப்பு : திரு முரளி T N
முகப்பட பெயர் செதுக்கல் : திரு ஆண்டன் பெனி