சிந்திய ஹைக்கூ

நிலவை மறைத்த
நிழலின் நிஜம்
அமாவாசை (1)
***************************************
சுகபோகத்தின் உச்சம்
அள்ளித் தெளித்தது
அமில மழை (2)
***************************************
பேச்சுக்கு பெற்றோரில்லை
பாட்டுக்கு பட்டம்
கானக்குயில் (3)
***************************************
கூர்முனை காட்டி
பதறவைத்தது
கடிகாரமுள் (4)
***************************************
வீசிய வலை
பின்னிய நூல்
முக நூல் (5)
***************************************
சகுனமின்றி
விண்ணில் பாய்ந்தது
சோதிடரின் உயிர் (6)
***************************************
தொடரும் நெருக்கடி
விரியும் வீடுகள்
வீழும் மரங்கள் (7)
***************************************
வாட்டும் வறட்சி
சீறிப் பாய்ந்தது
வெடிப்பில் வெளிச்சம் (8)
***************************************
விஞ்ஞானத் திருவிழா
போட்டியில் ஏசி யின் குளிரும்
புவியின் வெப்பமும் (9)

எழுதியவர் : ஸ்ரீராமுலு (19-Feb-16, 8:30 pm)
Tanglish : sinthiya haikkoo
பார்வை : 143

மேலே