மன்னார் ஸ்ரீராம் - சுயவிவரம்

(Profile)



எழுத்தாளர்
இயற்பெயர்:  மன்னார் ஸ்ரீராம்
இடம்:  சென்னை
பிறந்த தேதி :  20-Jun-1972
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  04-Sep-2015
பார்த்தவர்கள்:  151
புள்ளி:  25

என் படைப்புகள்
மன்னார் ஸ்ரீராம் செய்திகள்
மன்னார் ஸ்ரீராம் - படைப்பு (public) அளித்துள்ளார்
25-Jul-2020 6:00 pm

ஓ எண்ணமே! எங்கிருந்து வந்தாய் நீ
யார்யார்க்கு நீ சொந்தம்

ஆதி மனிதனின் சிந்தையில் உதித்த நீ
கரு மாறி உரு மாறி எந்தையிலும் வந்தாயோ

சின்னஞ்சிறு அலையாய் உள்ளூர எழுந்த நீ
சீற்றங்கள் சில கண்டு சீர் பெற்று வந்தாயோ

செவி வழி செய்தியாய் சில காலம் திரிந்த நீ
மாற்றங்கள் பல கண்டு மனம் மாறி வந்தாயோ

சிற்பியின் உளிபட்டு கல்வெட்டில் பதிந்த நீ
எழுத்தாணி முள் பட்டு ஏட்டினில் அமர்ந்தாயோ

கைவிரல் நுனிப்பட்டு கணினியில் நுழைந்த நீ
கண்மூடி திறக்கும்முன் கண்டத்தை கடந்தாயோ

ஓ எண்ணமே! எங்கிருந்து வந்தாய் நீ
யார்யார்க்கு நீ சொந்தம்

அருவமாய் வந்த நீ பல்லுருவம் பெற்று
பரிமாணத்தால்

மேலும்

மன்னார் ஸ்ரீராம் - தீபிகாசுக்கிரியப்பன் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
10-Dec-2017 9:33 am

இறகைத் தாங்கும்
எறும்பைக் கண்டு
வலிமைக் கற்றுக்கொண்டேன் ....
சிறகை விரித்துப் பறக்கும்
பறவைக் கண்டு
முயற்சியைக் கற்றுக்கொண்டேன் ....
துள்ளி ஓடும்
மானைக் கண்டு
துணிவைக் கற்றுக்கொண்டேன் ....
கண்ணில் பொய் வைத்து
உதடுகளால் பேசும்
உ றவைக் கண்டு
உண்மையை தேட கற்றுக்கொண்டேன் .....
தலையணையிடம் பேசும் போது
தனிமை கற்றுக்கொண்டேன் ....
வளரவளர வலிகள் தாங்கும்
மனம் கண்டு
என்னைக் கற்றுக்கொண்டேன் ....
இன்னும் கற்கிறேன்
பல பாடங்களை
ஒவ்வொரு செயலிலும் ......

மேலும்

தங்களின் வாழ்த்திற்கு மிக்க நன்றி .... 17-Dec-2017 9:00 pm
அருமை.........தொடரட்டும் உங்கள் கவிப்பயணம்..... 17-Dec-2017 5:55 pm
உண்மை தான்...ஒவ்வொரு செயலிலும் ஏதோ ஒரு பாடம் பயில்கிறோம் .கருத்திற்கு மிக்க நன்றி 12-Dec-2017 9:54 am
கற்றது கைமண் அளவு கல்லாதது உலகளவு... ஒவ்வொரு தோல்வியும் வெற்றியும் நமக்கு பாடம் சொல்லிக்கொண்டே இருக்கிறது... நாம் தான் கற்றறிய வேண்டும்... வாழ்த்துக்கள் அருமையாக சொன்னீர்கள்... 11-Dec-2017 9:33 am
மன்னார் ஸ்ரீராம் - மன்னார் ஸ்ரீராம் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
11-Dec-2017 5:23 pm

செங்கதிரோன் விலகி
நிலவொளிக்கு வழிவிட
செங்காந்தள் மலரெல்லாம்
இதழ் மூடி ஓய்வெடுக்க

இமைத்திரை மூடியும்
மனத்திரை விழித்திருக்க
அடிவயிற்றின் அமிலத்தால்
அலை அலையாய் எண்ணங்கள்

அணு அணுவாய் நகர்ந்தது
என் ஆறு மணித்தியானம்
ஊரெல்லாம் தூங்கியெழ
உறங்காமல் விழித்தெழுந்தேன்

மறுநாளும் துரத்தியது
என் தூங்கா வேட்டை
தூக்கத்தின் கால் இன்றி
துக்கத்தில் விழுந்தெழுந்தேன்

நாளொன்றாய் நகர்ந்து
ஒன்பது ஆகியும்
முற்றியது போராட்டம்
மூளைக்கும் மனதிற்கும்

இரு கன்னம் ஒட்டி
கருவளையத்தில் வீழ்ந்தது
கருவேல முள்முளைத்து
அகமெல்லாம் விரிந்தது

காரணம் களைய
வலைவிரித்தேன் தளத்திற

மேலும்

வாழ்த்திற்கு மிக்க நன்றி சர்பான், உங்களின் கருத்து மேலும் உற்சாகம் அளிக்கிறது.... 12-Dec-2017 8:44 am
வாழ்க்கையில் இறைவன் கொடுத்த ஒரு சிறு மரணம் தூக்கம் இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 11-Dec-2017 11:48 pm
மன்னார் ஸ்ரீராம் - படைப்பு (public) அளித்துள்ளார்
11-Dec-2017 5:23 pm

செங்கதிரோன் விலகி
நிலவொளிக்கு வழிவிட
செங்காந்தள் மலரெல்லாம்
இதழ் மூடி ஓய்வெடுக்க

இமைத்திரை மூடியும்
மனத்திரை விழித்திருக்க
அடிவயிற்றின் அமிலத்தால்
அலை அலையாய் எண்ணங்கள்

அணு அணுவாய் நகர்ந்தது
என் ஆறு மணித்தியானம்
ஊரெல்லாம் தூங்கியெழ
உறங்காமல் விழித்தெழுந்தேன்

மறுநாளும் துரத்தியது
என் தூங்கா வேட்டை
தூக்கத்தின் கால் இன்றி
துக்கத்தில் விழுந்தெழுந்தேன்

நாளொன்றாய் நகர்ந்து
ஒன்பது ஆகியும்
முற்றியது போராட்டம்
மூளைக்கும் மனதிற்கும்

இரு கன்னம் ஒட்டி
கருவளையத்தில் வீழ்ந்தது
கருவேல முள்முளைத்து
அகமெல்லாம் விரிந்தது

காரணம் களைய
வலைவிரித்தேன் தளத்திற

மேலும்

வாழ்த்திற்கு மிக்க நன்றி சர்பான், உங்களின் கருத்து மேலும் உற்சாகம் அளிக்கிறது.... 12-Dec-2017 8:44 am
வாழ்க்கையில் இறைவன் கொடுத்த ஒரு சிறு மரணம் தூக்கம் இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 11-Dec-2017 11:48 pm
மன்னார் ஸ்ரீராம் - படைப்பு (public) அளித்துள்ளார்
30-Dec-2016 6:51 pm

உன் குழலின் அழகில்
மயங்கி நிற்கும்
நாணல் குழலின்
ஒலியின்அலையும்..

குறிஞ்சி மலரும்
குவிந்து நிற்கும்
முல்லையும் நானும்
நாணும் மருதமும்..

பொதிகைத் தவழ்ந்த
இனிமைத் தென்றலும்
போதி மரமாய்
உன்னை தொட்டதும்..

கவியாய் குவிந்து
காதில் நுழைந்தேன்
உன்இதய ஒலியை
இதமாய் கேட்க..

மல்லிகை மணமாய்
உள்ளே புகுந்தேன்
உன் மனமாய் மாறி
மலராய் மலர..

நிழலாய் மாறி
நித்தம் பிடித்தேன்
காலந்தொட்டும்
தொடர்ந்தே வர..

என் உயிரும் மெய்யும்
உனக்கே உரிமை
உன் செவியை சாய்த்து
சேதியை கேளாய்

இனிமை என்கிற
கம்பளம் விரித்து
என் இளமைக் காலம்
சுருட்டிவிட்டாய்

இதயம் என்று

மேலும்

மன்னார் ஸ்ரீராம் - இராசேந்திரன் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
08-Jun-2016 11:30 am

அன்புத்தோழமைகளுக்கு என் சிரம்தாழ்ந்த வணக்கங்கள். ஒரு சாதாரண மனிதனை உங்கள் கருத்துகளில் தோள்கொடுத்து ஒவ்வொரு படியாக உயர்த்திவருகிறீர்கள்.அதே போல் என்னை உயர்த்திவருவதற்கு நம் தளம் தந்த மேடை உங்களோடு இணைக்கவைத்து என்னை பலவாறு உயரச்செய்து வருகிறது. இதற்கு உங்களுக்கும், உங்களோடு இணையவைத்த இந்த தளத்துக்கும் எத்தனை நன்றிகள் சொன்னாலும் அது குறைவுதான். இருந்தாலும் என் நன்றிகளை ஏற்றுக்கொள்ள வேண்டுகிறேன்.

கிராமிய மூலையிலிருந்து முதன் முதலாக தலை நகரம் நோக்கிய பயணம் என் வாழ்வில் இன்னுமொரு உயரம். சென்னை புத்தக கண்காட்சியில் கீதம் பதிப்பகம் தயாரான ”கவியாட்படை” எனும் நூலில் என் “எல்

மேலும்

நன்றி அய்யா. இனி பல கிராமியக்கவிதைகளையும். கிராமியப்பாடல்களையும் எழுதப்போகிறேன்.உங்கள் ஆசிகள் அய்யா. 09-Jun-2016 7:13 pm
வாழ்த்துக்கு நன்றி தோழரே. எல்லாம் தோழர்களின் வாழ்த்துகளும், பெரியோர்களின் ஆசிகளும்தான் காரணம். 09-Jun-2016 7:11 pm
அன்புத்தம்பிக்கு அண்ணனின் நன்றிகள். விரைவில் உமது படைப்பும் நிச்சயம் பேசப்படும் நாள் வெகுதூரத்தில் இல்லை. . 09-Jun-2016 7:10 pm
வாழ்த்துக்கு நன்றி தோழரே. கவிஞன் என்ற பெருமையை அடைய பல காலம் ஆகலாம் இருந்தாலும் எப்போதும் கிராமியத்தவனாகவே இருக்க விரும்புகிறேன். 09-Jun-2016 7:08 pm
மன்னார் ஸ்ரீராம் - கோபி சேகுவேரா அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
11-Apr-2016 12:29 pm

தூக்கி குப்பையில போடுங்கையா
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

முப்போகம் வெளஞ்ச காலம் போச்சி
காடு களனிலாம் தரிசா போச்சி
விளைநிலமும் விலைநிலமா ஆச்சி

வீட்டுக்கு வீடு
ஆடு மாடு
இருந்த காலம் போயி...
வீட்டுக்கு வீடு
பைக்கு காருனு வந்துடுச்சி...

புங்கமரத்தையும்
வேப்பமரத்தையும் வெட்டிபுட்டு
அழகுக்காக செடி வளக்குற
நகரீக தக்காளி மவனுங்க...
சோத்துக்கு மட்டும்
எங்கள எதிர்பாக்குறானுங்க...
சேத்துல இறங்க
ஒருபய வரமாட்டான்...

காணி நிலம் வித்து
படிக்க வச்சேன்...
காலேச் வரைக்கும்
அனுப்பி வச்சேன்...

ஏதோ கம்பியூட்டர் வேலையாம்
வெளிநாட்டு போன எமொவன்
திரும்பி வரவேயில்ல...

அப்பப்ப

மேலும்

இயற்கையை அழிப்போர் ஈனப்பிறவிகள். 18-Apr-2016 7:47 pm
நன்றிகள்... தோழர்😊 16-Apr-2016 1:07 pm
அருமை தோழரே, ஆவேசம் தெறிக்கிறது. இன்னும் எழுதுங்கள். 15-Apr-2016 12:56 pm
நன்றிகள்... தோழர்😊 15-Apr-2016 12:09 pm
மன்னார் ஸ்ரீராம் - படைப்பு (public) அளித்துள்ளார்
18-Mar-2016 6:41 pm

இரையை தீண்டி
இரையாய் ஆனது
தூண்டிலில் மீன் (1)
***************************************
அழுகையில் வந்து
அழவிட்டு சென்றது
ஜனனமும் மரணமும் (2)
***************************************
மாடாய் உழைத்தும்
நடையை கட்டியது
காலில் செருப்பு (3)
***************************************
இருந்தும் கொள்ளும்
இரந்தும் கொல்லும்
பசி (4)
***************************************
வாழ்கை தத்துவம்
ஏற்றமும் இறக்கமும்
விமானப்பயணம் (5)
***************************************
ராத்திரி ராஜா
வேடம் கலைத்தான்
கனவு முடிந்ததால் (6)
***************************************
பற்றிக்கொண்டது
அணையுமா அணைக

மேலும்

மேலும்...
கருத்துகள்

மேலே