கற்றுக்கொண்டேன்
இறகைத் தாங்கும்
எறும்பைக் கண்டு
வலிமைக் கற்றுக்கொண்டேன் ....
சிறகை விரித்துப் பறக்கும்
பறவைக் கண்டு
முயற்சியைக் கற்றுக்கொண்டேன் ....
துள்ளி ஓடும்
மானைக் கண்டு
துணிவைக் கற்றுக்கொண்டேன் ....
கண்ணில் பொய் வைத்து
உதடுகளால் பேசும்
உ றவைக் கண்டு
உண்மையை தேட கற்றுக்கொண்டேன் .....
தலையணையிடம் பேசும் போது
தனிமை கற்றுக்கொண்டேன் ....
வளரவளர வலிகள் தாங்கும்
மனம் கண்டு
என்னைக் கற்றுக்கொண்டேன் ....
இன்னும் கற்கிறேன்
பல பாடங்களை
ஒவ்வொரு செயலிலும் ......