சிறு துளிப்பா

இரையை தீண்டி
இரையாய் ஆனது
தூண்டிலில் மீன் (1)
***************************************
அழுகையில் வந்து
அழவிட்டு சென்றது
ஜனனமும் மரணமும் (2)
***************************************
மாடாய் உழைத்தும்
நடையை கட்டியது
காலில் செருப்பு (3)
***************************************
இருந்தும் கொள்ளும்
இரந்தும் கொல்லும்
பசி (4)
***************************************
வாழ்கை தத்துவம்
ஏற்றமும் இறக்கமும்
விமானப்பயணம் (5)
***************************************
ராத்திரி ராஜா
வேடம் கலைத்தான்
கனவு முடிந்ததால் (6)
***************************************
பற்றிக்கொண்டது
அணையுமா அணைக்குமா
கண்டதும் காதல் (7)
***************************************
தறி கெட்ட பயணம்
தெளிந்த சிந்தனை
சிறையில் யோகா (8)
***************************************
விரக்தியின் விளிம்பு
ஆதரவுக்கரம்
நவீன துறவு (9)
***************************************
கூட்டி கழித்து
பாடம் சொன்னது
மழையும் வெயிலும் (10)

எழுதியவர் : ஸ்ரீராமுலு (18-Mar-16, 6:41 pm)
சேர்த்தது : மன்னார் ஸ்ரீராம்
Tanglish : siru thulippaa
பார்வை : 87

மேலே