நடமாடும் நதிகள் -9
1.***************************************
கண்ணாடியில் முகம் பார்க்கிறேன்
தெளிவாக தெரியவில்லை
என் முகமூடி
2.***************************************
பெரியாரின் கல்லறையைச் சுற்றி
பூத்துக் கொண்டிருக்கிறது
ஜாதி மல்லி
3.***************************************
அழுகிறது குழந்தை
அம்மா என்று கத்துகிறது
தொழுவத்தில் பசு
4.***************************************
தேன்குடிக்கும் வண்டுகள்
மகரந்தச் சேர்க்கையில் மரணிக்கிறது
பூக்களில் மீத்தேன்
5.***************************************
உயர்சாதி மனிதனுக்குள்
ஓடிக் கொண்டிருக்கிறது
ஒடுக்கப் பட்டவனின் ரத்தம்
6.***************************************
தினமும் கொண்டாடுகிறேன்
காதலர் தினம்
சாப்பிட அழைக்கிறாள் மனைவி
7.***************************************
தீண்டத் தகாதவன் தொட்டாலும்
சுருங்கித்தான் போகிறது
தொட்டாச் சிணுங்கி
8.***************************************
தூரமாய் தட்டு
பக்கத்தில் வானம்
சோறு உண்ணும் குழந்தைக்கு
9.***************************************
உடையும் முனை
ஓவியமாய் மரம்
பென்சில் சீவுகிறான் சிறுவன்
10.**************************************
நீந்திக் கொண்டே
நிலவைச் சுற்றி பார்க்கிறது
நதியில் மீன்கள்
***************************************
***************** ஜின்னா *****************
மிக்க நன்றி:
-------------------
1. முகப்பட வடிவமைத்த திரு கமல் காளிதாஸ்
2. தொடர் ஒருங்கிணைப்பாளர் திரு முரளி T N
3. முகப்பட பெயர் பதித்தவர் திரு ஆண்டன் பெனி