நடமாடும் நதிகள் 21 கவித்தாசபாபதி

“மௌனம் கசியும் பாறைகள்”
***************************************

அதிகாலைப் பனிமேடை
குருவிகளின் கூட்டிசையில்
கௌசல்யா சுப்ரபாதம்

*

பச்சைமலைக் காடு
காட்டையே கட்டியிழுக்கிறது
வனவாசியின் கூப்பிடுகுரல்

*

கள்மரத்துப் பானைகளில்
சொட்டுசொட்டாய் வடிகிறது
தோட்டக்காரனின் தாகம்

*

வலையில் சிக்காத கடல்மீன்கள்
சிக்கிவிடுகின்றன
அவர்கள் பாட்டில்

*

யுகங்கள் கடந்துபோய்விடவில்லை
நின்றயிடத்திலிருந்தே வாழ்த்தும்
அருவிகள்

*

மஞ்சள் குருதியில்
மினுங்கும் மேனி
பொன்அந்தி மாலை

*

ஓடைகள் நதிகளாவதை
மலைத்து ரசிக்கின்றன
கசியும் பாறைகள்

*

அமாவாசை இரவு
எங்கு தவிக்கிறதோ
பிள்ளை(யின்) நிலா

*

நினைவுகளை நனைத்தேன்
நதியில்
நதி நீந்துகிறது

*

கங்கைக்கு
என்று தீரும்
புண்ணிய தாகம் ? (இந்த கங்கையில் , எந்த நீரலை , புனிதம் தொடும்?)
**********************
சிறப்பு ஹைக்கூ
*

பார் அந்த நீர்நிலையில்
நிழல்களை நனைத்து(க்)
குளிரும் மரக்கிளைகள்******ART OF GIVING ******


( தனி மனிதனாக இல்லாமல் தன்னை ஓர் இயக்கமாக்கி இலக்கியச் சேவை புரியும் கவிஞர் ஜின்னாவுக்கு சிறப்பு ஹைக்கூ சமர்ப்பணம்)

( “மௌனம் கசியும் பாறைகள்” கவிஞர் சிற்பி பாலசுப்பிரமணியம் அவர்களுக்கு சமர்ப்பணம் )

எழுதியவர் : கவித்தாசபாபதி (26-Feb-16, 12:06 am)
பார்வை : 469

மேலே