மழலையின் பார்வையில் 2
![](https://eluthu.com/images/loading.gif)
யார் வீசியது பந்தை
இவ்வளவு தூரத்தில் - நிலா
--------------------------------------------------------
நேற்று வரை எனக்கு
இன்று முதல் உனக்கு
பாலும் பாசமும் - தம்பி
-------------------------------------------------------
இன்னொரு அம்மா - பாட்டி
---------------------------------------------------------
எண்ணப்போகிறேன் - நட்சத்திரங்கள்
-----------------------------------------------------------
என்னைப்போல் ஒருவன் - கண்ணாடி
-----------------------------------------------------------
எப்படி பந்து போட்டாலும்
அடிக்கிறான் - சுவர்
---------------------------------------------------------
நானும் அம்மாதான்
பப்பிக்கு - பொம்மை
-----------------------------------------------------------
விளையாடக்கூடாதாம்
பார்த்துக்கொண்டிருக்கிறேன்
யார்யாரோ விளையாடுவதை - டிவி
----------------------------------------------------------
கொடுமைப்படுத்துகிறார்கள் - குளியல்
-----------------------------------------------------------
எல்லாரும் தூங்குகிறார்கள்
என்னைத்தவிர ..- ஞாயிற்றுக்கிழமை
- அரவிந்த்