நடமாடும் நதிகள்

குன்றுகளுக்கு இடையில்
நடமாடும் நதியினில் தீ
விடியலின் மிளிர்ச்சி. -1

நடக்க நடக்கத்
தெரிந்து மறைந்தும் போகிறது
கானல் நீர் – 2

குருடன் காட்டும்
கோல் வழியில் இன்னொருவன்
திறந்திருக்கிறது சாக்கடை -3

முகச்சவரம் செய்தேன்
குளித்து எழுந்தும் போகவில்லை
மன அழுக்கு – 4

கடற்கரையில் காதலர்கள்
என் மனத்திரையில் ஓடியது
நீலப்படம். – 5

சிறுவன் கையில்
சிறிய கண்ணாடித் துண்டு
சுவற்றில் சூரியநடனம் -6

மனவலைகள் எழுந்து
நுரையாக கனவில் விழுந்து
காத்திருக்கிறது காமம் – 7

தூரத்து இடியொலி
வங்காள விரிகுடாவில் வேட்டொலி
ஈழத்துப் போர்..-8

கரியதொரு முட்டை
இருளில் ஆழ்ந்து உறங்குகிறது
உலகம்.– 9

நாளைய கவலையில்
நடக்கையில் காலை இடறியது
ஒரு கல்லறை -10


மனமார்ந்த நன்றி
````````````````````````````
தொடர் தொகுப்பாசிரியர் :திரு ஜின்னா
முகப்பட வடிவமைப்பு : திரு கமல் காளிதாஸ்
தொடர் ஒருங்கிணைப்பு : திரு முரளி T N
முகப்பட பெயர் செதுக்கல் : திரு ஆண்டன் பெனி
தா. ஜோசப் ஜுலியஸ்

எழுதியவர் : தா. ஜோசப் ஜுலியஸ் (22-Feb-16, 7:57 am)
Tanglish : nadamaadum nadhigal
பார்வை : 403

மேலே