சலாவு 55 கவிதைகள்

உச்சி முதல் பாதம் வரை.
தீண்டி விட்ட தென்றல் ஒன்று.
என்னை கடந்து போகையிலே.
காத்திருந்த நெஞ்சத்திற்கு.
பார்வை சாரல் தூவியது.
கள்ளமில்லா உள்ளத்திலே.
காதல் ஊற்று பொங்கியது.
பெண்ணே,
உன்னை பார்த்து.
இந்த உலகில் அழகுள்ள அனைத்தும்
அழகற்றது. என்னையும் சேர்த்து.
கண்கள் போர் களத்தில்.
காதல் போரில்.
தோல்வியடைந்த நான்.
சரணடைந்தேன் உன் இதய சிறையில்.
உன், இமைகளின் நாட்டியம்!
இதழ்களின் ஓவியம்!
இவை இரண்டும்.
என் இனிய கவிக்கு காவியம்.
ஊரெங்கும் சுற்றி வந்தேன்
உன்னை எங்கும் காணவில்லை.
உண்மை நிலை கண்டறிந்தேன்.
நீ என்னை தேடவில்லை.
என்னில் உன்னை வைத்துக்கொண்டு.
தேடி தேடி அலைகின்றேன்.
உன்னில் என்னை தந்துவிட்டு
தேடாமல் போகின்றேன்.
காதலித்தால் பாவம் தானோ.
காயம் பட்ட நெஞ்சமிது...............
.........................................
.......................................................சலா

எழுதியவர் : (22-Feb-16, 8:58 am)
பார்வை : 75

மேலே