நடமாடும் நதிகள் - 18

ஒவ்வொரு பெண்ணும்
புரிந்துவைத்திருக்கிறாள்
புருவமத்தியில் ஒரு கைக்கூவை.
நல்ல கைக்கூ கிடைப்பது ஒரு வரம்.
என் தவம் இன்னும் முடியவில்லை
இதோ நதிக்கரையில்
நானும் என் கூழாங்கற்களும்..
________________________ 💐💐💐
தவிப்புக்குரலெழுப்பியபடி
தனித்துப்பறந்தது
நாரையொன்று நிலவொளியில்
_________________________
வழியனுப்பும் போதெல்லாம்
வலி தந்து நகர்கிறது
ஒரு பிரியமான சன்னல்.
_______________________
தும்பியின்
சிறகில் கண்டேன்
ஒரு ஜோடி வானம்.
_______________________
கைகட்டியிருந்தால்
சிலுவைகள்
இல்லை.
_____________________
நேற்றிரவு கட்டிக்கிடந்த ஆடு
இன்று பந்தியில் அசைபோடுகிறது
பலநூறு வாய்களால்.
____________________
பலூன் விற்பவன்
குறட்டை விடுகிறான்
கலர் கலராய்.
____________________
தூண்டிலிட்டதும்
சிக்கிவிடுகிறது
குளம்.
_____________________
மொழியை காற்றில்
வரைகிறது
ஊமையின் விரல்கள்.
___________________
சத்தம் பறந்துவிட
வெறும் கிளை
ஆடிக்கொண்டிருந்தது.
________________
உரசாத கல்லிலெல்லாம்
உறங்கிக்கொண்டிருக்கும்
ஆதி நெருப்பு.
__________________
திரும்பிவராத
குருவிகளைத் தேடவாவது
கூடுகளுக்கும் வேண்டும் சிறகுகள்.
_____________________________________________________
நண்பர் ஜின்னா
ஓவியர் காளிதாஸ்
மற்றும் முரளி சார் ஆண்டனி சாருக்கும்
என் நன்றிகள்
_ இப்படிக்கு
மீராவைப் புரிந்தும்
புத்தனைத்தேடும்
நான் கண்ணன்.