வேறு நிலாக்கள் 22

வாழ்வெனும் பெயரினிலே
___________________________________
*******************************
தனித்ததனால்..
பரிதவித்த கோழிக்குஞ்சு..
ஓடிவந்து கூட்டத்தோடு..
சேர்ந்துகொண்ட..
தருணத்திலிருந்தும்...

பல்லியின்..
பாய்ச்சலுக்கு..
பட்டெனப்பறக்கும்..
பூச்சியின் சிறு சிறகிலிருந்தும்..

அம்புக்குத்தப்பிய..
பறவையின்..
அவசர சிறகடிப்பிலிருந்தும்...

வெறிகொண்டவேங்கையின்..
பிடிக்குத்தப்பிய..
புள்ளிமானின்
தாவலில் இருந்தும்...

பறவையோடு..
பறந்துபோன இரை ஒன்று..
பிடி நழுவி..நீருக்குள் வீழ்ந்து
மீண்டும் மீனான..
தருணத்திலிருந்தும்...

சுனாமிக்கு..
உயிர்பிழைத்தவன்..
அமைதியான கடல் பார்த்து..
அழுதுமுடித்ததிலிருந்தும்...

இனிதே துவங்குகிறது..
ஜீவராசிகளின்...
மரணம் நோக்கிய..
மற்றும் ஓர் பயணம்.,!!!


வாய்ப்பளித்த கவிதாசபாபதி ஐயா
அவர்களுக்கு என் நன்றிகள் ...
_ நிலாகண்ணன்

எழுதியவர் : நிலாகண்ணன் (23-Feb-16, 6:19 am)
பார்வை : 174

மேலே