உன் நினைவில்

விரும்பியே இதயத்தை
உனக்கு கொடையளித்த
வள்ளல் நான் - இன்று
கையேந்தி, சிரம் சாய்ந்து
கிடக்கிறேன் உன் முன்,
உயிர் துடிப்பை யாசகம் கோரி!

புறக்கணிப்பு சாட்டை கொண்டே
விரட்டியடிக்கிறாய் எனை நீயும்,
என்றாலும் - நிமிட முள்
மணித்தியால முள் கடப்பதன்ன
எ(ன்)னை துரத்தி பிடிக்குதே
உன் நினைவுகள் இங்கே!

உன் கண்களுக்குள் விரிந்த
எனக்கான உலகம்
ஒளியிழந்து போகுதே - நீ
இமை தாழ்த்தி மறுப்பினை
இடிகளாய் இறக்(கு)கையில்!

போற்றி போற்றி நாம் செய்த
காதலென்னும் காவியம்
கானலென கண் மறைய - உன்
பெயர் கொண்டு இயங்கும்,
இதயமது மௌனம் கொள்ளும்
வேலை நிறுத்தற் போராட்டம் செய்தே!

கன்னியிவள் கண்களதுவும்
ஏக்கம் கொள்ளும் உனை காண,
கல்லரை பூக்கள் கூட
ஆசை கொள்ளும் கூந்தல் சேர!!!

எழுதியவர் : கவிப் பிரியை - Shah (23-Feb-16, 6:48 am)
Tanglish : un ninaivil
பார்வை : 1222

மேலே