கவிப் பிரியை - Shah - சுயவிவரம்

(Profile)எழுத்தாளர்
இயற்பெயர்:  கவிப் பிரியை - Shah
இடம்:  தர்கா நகர் - இலங்கை
பிறந்த தேதி :  10-Feb-1990
பாலினம் :  பெண்
சேர்ந்த நாள்:  22-Feb-2014
பார்த்தவர்கள்:  2608
புள்ளி:  554

என்னைப் பற்றி...

என் எண்ணத்தில் உதிக்கும் கவி வரிகளை பதிந்து வைக்கவே ஆசை....

என் படைப்புகள்
கவிப் பிரியை - Shah செய்திகள்
கவிப் பிரியை - Shah அளித்த படைப்பில் (public) V MUTHUPANDI மற்றும் 1 உறுப்பினர் கருத்து அளித்துள்ளனர்
22-Jul-2017 1:58 pm

உன் விழி பேசும் கதையை
மொழியாகக் கொண்டவள்
என் இதழ் பேச மறந்தாலும்
மௌனமாய்க் கவி வரைவேன்...

விரல் பிடித்து எழுதுவதாய்
என் மனம் அணைத்து நீயும்
பயிற்றுவித்துப் போனாய்
பாமாலை எனக்கும்...

களமிறங்கினேன் உன் நினைவில்
கவி வடிக்க காகிதத்தில்...
மை தீர்ந்தும் - எந்தன்
கவி மழை ஓயவில்லை...

கண்ணெட்டும் தூரமெல்லாம்
காணாத காட்சியிலெல்லாம்
என் பார்வை தாவிக் குதித்து
உன்னைக் காண விளைகிறதே...

காதலை எனக்குள்
கற்றையாய் நிரப்பிவிட்டாய்...
ததும்பி வழிகின்றாய்
என் தமிழெல்லாம் நீயே..

காதலாக நீ...
கவிதையாக நான்...
காலமெல்லாம் உன்னைப் பாட
காத்திருப்பேன் நான்!..

மேலும்

கவிதை வாழட்டும்...! 23-Jul-2017 11:23 am
பெண்மையின் காதலை பெருமைப்படுத்திய உங்கள் கருத்து மனதை கவர்ந்தது.. நன்றி உறவே.. 23-Jul-2017 11:22 am
பெண்களின் காதல் என்றுமே அழகுதான் -நன்று கவிப்ரியை 23-Jul-2017 9:59 am
மரணம் வரை அவளை எழுதித் தீர்ப்பதே என் கவிதைகளின் விரதம் 23-Jul-2017 8:44 am
கவிப் பிரியை - Shah அளித்த படைப்பில் (public) V MUTHUPANDI மற்றும் 1 உறுப்பினர் கருத்து அளித்துள்ளனர்
22-Jul-2017 1:49 pm

சொல்லாத என் காதலின்
சொந்தக்காரனே - நான்
சொப்பனத்தில் மட்டும் - உன்
செவியினுள் ஓதுகிறேன்
சிந்தாமல் காதலை...

சந்தித்தோம் முன்னொரு நாள்...
சிந்தை நீ நிறைத்ததும் அந்நாள்...
சுந்தரன் நீ சிரித்தாய்...
சரிந்தேனுன் சுக நினைப்பால்...

சந்தங்கள் புதிதாய் உண்டானதில்
சங்கீதம் போன்று வாழ்வானது...
சாமத்திலும் எந்தன் கனவுகளில்
சாகவரம் பெற்றுன் நினைவோடுது...

சிந்தித்தேன் இரவு பகலாய் - நான்
சிக்கிய கதை சொல்ல உன்னிடம்...
செப்ப வந்த போதெல்லாம் அதனை
சங்கடம் சூழ்ந்தது இள மனதை...

சந்தர்ப்பங்கள் நழுவவிட்டதில்
சுலபமாக விதி வென்றுவிட்டது...
சகலதுமாய் நான் நினைத்த நீயே
சதியாகி பின் என்னைச் சு

மேலும்

உண்மை தான்... சொல்லாத காதலின் வலி உள்ளோடு மட்டுமே.. 23-Jul-2017 11:20 am
நன்றி.... 23-Jul-2017 11:20 am
சொல்லாத என் காதலின் சொந்தக்காரனே - நான் சொப்பனத்தில் மட்டும் - உன் செவியினுள் ஓதுகிறேன் சிந்தாமல் காதலை... அருமை அருமை கவிப்ரியை 23-Jul-2017 9:57 am
அருகிலிருந்தும் பார்வைகள் பேசியும் இதழ்கள் ஆசையை சொல்லாத நாட்கள் சுடுகின்ற பாலைவனம் 23-Jul-2017 8:52 am
கவிப் பிரியை - Shah அளித்த படைப்பில் (public) V MUTHUPANDI மற்றும் 1 உறுப்பினர் கருத்து அளித்துள்ளனர்
22-Jul-2017 1:46 pm

வாழ்வின் வைகறையாய் வந்தவனே
தாழ்வு மனப்பான்மை தகர்த்து
சோர்வு உயிரில் அகற்றி
கோர்வையாய் உணர்வுகளில் உன்னை
கோர்த்துச் சென்ற அழகே...

தொட்டாச் சிணுங்கியாய் நெஞ்சம்
உன் பார்வை தொட்டவுடன்
சுருண்டு போகிறது உனக்குள்...
சிறு தொற்றாய் பீடிக்கும் பசலை
உன் நினைவிலே நீளுகிறது நாளும்...

கிடந்து தவிக்கிறது உள்ளம்
கடைசியாய் நீ செப்பிப் போன
வார்த்தை வலைக்குள் சிக்கி...
ஈர்த்த உன் ஆண்மையில்
இரட்டிப்பு வேகத்தில் சுழலுது உலகம்...

இளம் சூரிய வருகை முதல்
முதிர் நிலவின் மரணம் வரை
முழுப்பொழுதும் உன் முகமே
அகமெல்லாம் நிறைந்து நின்று
ஆட்சி அமைக்கிறது எனக்குள்...

காட்சியானால் போதும் உந்தன்

மேலும்

:) நன்றி உறவே.. 23-Jul-2017 11:19 am
உணர்ந்து படித்து கருத்துரைத்தமைக்கு மிக்க நன்றி நட்பே... 23-Jul-2017 11:18 am
முழுப்பொழுதும் உன் முகமே அகமெல்லாம் நிறைந்து நின்று ஆட்சி அமைக்கிறது எனக்குள்... உணர்வு நிறைந்த காதல் -சுகமும் ரணமும் - நன்று கவிப்ரியை shah 23-Jul-2017 9:56 am
அறிமுகம் இல்லாத ஒருத்தியிடம் அறிமுகமான இதயம் தொலைகிறது 23-Jul-2017 8:56 am
கவிப் பிரியை - Shah அளித்த படைப்பில் (public) V MUTHUPANDI மற்றும் 1 உறுப்பினர் கருத்து அளித்துள்ளனர்
22-Jul-2017 1:41 pm

விழிகள் உன்னைப்
பார்க்கத் துடிக்க
தூரம் என்னைத்
தண்டிக்கிறது...
உன்னைக் காண
காலத்தோடு - நான்
செய்யும் போராட்டம்
அறிந்ததுண்டா நீ...
மனக்குதிரை வேகத்தில்
காலத்தின் ஓட்டைகளில்
நுழைந்து உன்னை
நெருங்கத் துடிக்கிறேன்...
காலமோ என்னை
கண்கட்டு வித்தை
செய்வதாய் எண்ணி
காயம் செய்து போகிறது...
நியாயமா அன்பே...
நீ தந்த காதல்
நிஜங்களை விடுத்து
கற்பனையில் தொலைவது...
ஒரேயொரு முறை
என் கைவிரல் பிடித்திடு...
இதழ்களோடு பேசிவிடு...
இமைகளை மீட்டிவிடு...
வாழ்ந்த நாட்களினதும்
வாழும் நிமிடங்களினதும்
அர்த்தம் கூடிப்போகும் அன்பே
நீ அரவணைத்து போனால்..!

மேலும்

நன்றி நட்பே 23-Jul-2017 11:16 am
மிக்க நன்றி தோழமையே... 23-Jul-2017 11:16 am
கவிப்ரியையின் கவிதை ... ஒரேயொரு முறை என் கைவிரல் பிடித்திடு... இதழ்களோடு பேசிவிடு... இமைகளை மீட்டிவிடு... அழகு ..தோழியே ! 23-Jul-2017 9:54 am
கவிப் பிரியை - Shah - படைப்பு (public) அளித்துள்ளார்
22-Jul-2017 2:46 pm

முகில்கள் போல்
விழிகளும் எனது...
கனத்ததும் பொழிகின்றன
நிறுத்தாமலே நீரை..!

மேலும்

கண்களின் மார்கழி காதலின் தீர்த்தங்கள் 23-Jul-2017 8:31 am
கவிப் பிரியை - Shah - படைப்பு (public) அளித்துள்ளார்
22-Jul-2017 2:33 pm

பிரியத்தின் துளிகள்...

துளி #51

நிழலாகப் பின் தொடர்கிறாய்
இருளாகிப் போன வாழ்விலும்...
நினைவாக உடன் வருகிறாய்
நிகழ்காலம் மறந்த உணர்விலும்...

துளி #52

காதல் வரலாறெழுத
கவிகள் புனைகிறேன்...
வரலாறு முழுவதிலும்
வரிகளை நீயே ஆள்கிறாய்!..

துளி #53

நிழல் போல் நீ என்னில்...
எந்தன் அருகிருந்தாலும்
அடியெடுத்து வைக்கையில் நான்
படிப்படியாய் நகர்கிறாய் நீ..!

துளி #54

மொழிக்கு முதலிலும் வந்து
இடையிலும் நின்று
ஈற்றிலும் தொடர்ந்தாய்...
என் தமிழெல்லாம் நிறைந்தாய்!..


துளி #55

குறைந்தபட்ச அன்பாவது
கொடுத்துச் செல்..!
அகால மரணம்
இந்த அபலைக்கு
மறுக்கப்படட்டுமே!..

து

மேலும்

துளிகள்... நதியாய்... அருமை... 23-Jul-2017 9:35 am
இதயத்தின் தூறல்கள் காதலை குடையாக நீட்டுகிறது 23-Jul-2017 8:34 am
கவிப் பிரியை - Shah - படைப்பு (public) அளித்துள்ளார்
22-Jul-2017 2:13 pm

நீ அருகிருக்கையில்
நனைத்த மழைத்துளி ஈரம்
காயமலே இதயத்தில்!..
ஒரே நிமிடம் தந்து
நன்றாக உனதுருவை
கண்களில் நிரப்பிடச்சொன்னாய்!..
ஆறடி உயரத்தை
அறுபதே வினாடியில்
அளப்பதெங்ஙனம்?!..
இதில் நிரப்புவதெக்கணம்?!..
அதை மட்டும் உரைக்காமலே
விடைபெற்றுப்போனாய்!..

மேலும்

விடைகள் இல்லாத வாழ்க்கை தான் நினைவுகளின் கோப்பைக்குள் கனவுகளை அருந்துகிறது 23-Jul-2017 8:37 am
கவிப் பிரியை - Shah - படைப்பு (public) அளித்துள்ளார்
22-Jul-2017 2:06 pm

என் உயிர்த் துடிப்பின் உருவே
உலவுகிறாயென் நினைவில் நீயே...
உன்னிடம் கடன் பெற்றே
உதித்திட்ட உயிரோயிவள்
உன்னிடமே மீள்கிறாள் - மீண்டும்
தவணை முறையே...

கதிரவன் மண்ணில் - கதிர்
பரப்பும் கணம் முதலாய்
நிலவின் கிரணங்கள் - நிலம்
நனைக்கும் பொழுதுகளெல்லாம்
புதுக்கதைகள் உரைக்கிறாய்
காதோரம் மெதுவாய்...

கண்டநாள் முதல் நான்
கனவிலும் மறந்ததில்லை உன்னை...
கரை தொட்டு - நலம்
விசாரிக்கும் அலைகளாய்
ஐந்தரையடி தேகத்துள்
ஓயாமல் அலைந்து திரிகிறாய்...

அசைகின்ற கடிகார முள்ளில்
கரைகின்ற நாழிகையிலும்
வரைகின்ற வாழ்க்கை கோலத்தின்
மறைந்திருக்கும் புள்ளிகளிலும்
ஒளிந்திருக்கும் என்னவனே...

மறந

மேலும்

காதலின் கருவறையில் சில ரணங்கள் பிரசவிக்கின்றது 23-Jul-2017 8:38 am
கவிப் பிரியை - Shah - உதயகுமார் அளித்த எண்ணத்தை (public) பகிர்ந்துள்ளார்
15-Feb-2016 9:39 pm

உங்க எல்லாருக்கும் என்ன வேணும் உதயா செத்துட்டா  அவ்ளோ தான், உதயா தற்கொலை பண்ணிக்கிட்டான்னு நா எப்போ சொன்ன. அவன் மரணம் இயற்கையான மரணம்  போல தான்.உதயாவோட மனைவி . சாகும் போது அவங்களோட அக்காவிடம்( உதயாவின் அண்ணி ) சத்தியம் வாங்கி கொண்டார்களாம். உதயாவை நல்லா பாத்துக்கணும் என்று. அதுனால தான் . உதயா மனைவி செத்துதத்து அப்புறம் , அவங்களோட அக்கா உதயாக்கு  கால்பண்ணி ,  உதயா நான் எப்போ கால் பண்ணாலும் நீங்க  உங்க போன் ரீச் ஆகனும், நைட்  உங்க fb  on  ல இருக்கணும். நீங்க என் கூட பேசுலனா கூட பரவா இல்ல என்று சொல்லி இருந்தாங்க. அதுனால தான் , நாங்க எல்லாரும் எங்களோட சொந்த ஊருக்கு போகும் போது . உதயா போன் , வீட்டுலவே சாஜ் பொட்டுனு போன, நீங்க எல்லாரும் உதயாவை பத்தி கேப்பிங்கனு தான் , அவனோடு இருந்த எழுத்து.காம் பிரிண்ட்ஸ் unfrien  பண்ண fb  la ..    அப்படி இருந்தும் எதுமே தெரியாம எதுக்கு fb  ல வந்து . தேவை இல்லாம பேசுறிங்க .....  தயவு செய்து எல்லாரும் அவங்க வேலையைப் பாருங்க ஓகே . தேவையில்லாம  பேசிட்டு இருந்தா ... அது நல்லா இல்லைங்க . உதயாவை பத்தி வேற ஒரு எண்ணம் ... இன்று மாலை போட்டு இருந்த ..ஆனால் அதை delete  பண்ணிட மறுபடியும் எதான பிரச்சன வரும் என்று . என் பொறுமைக்கும் ஒரு எல்லை உண்டு .. நீங்க என்ன மேல கஷ்ட படுத்துரிங்க .. உதயா சொன்னா . எழுத்து,காம் பத்தி அதுனால தான் ... அவ maraintha எண்ணம் கூட போட்ட .. எல்லாரும் புரிஞ்சிக்கிங்க ...  நான் இதுக்கு அப்புறம் எண்ணம் பதிக்க மாட்ட ..   எல்லாரும் புரிஞ்சிக்க ட்ரை பன்னுவிங்கன்னு நெனைக்கிற 
   

மேலும்

ஒருத்தன் இறந்துட்டான் என்கிற செய்தியை இவ்ளோ வன்மமா சொன்ன முதல் ஆளு நீங்க தான் ,,, நம்பமுடியவில்லை .. இவனா சொன்னான் இருக்காது நம்ப முடியவில்லை ....!!! 15-Feb-2016 10:04 pm
ஹலோ மிஸ்டர்.. என்ன என்ன கலர் கலரா உளறீட்டு இருக்கீங்க. செத்துப்போயிட்டானு ஒரு வரியில ஒழங்கா எண்ணம் போட்டுட்டு இருந்தா பிரச்சினையே இல்ல... உதயா.. ! ஓ சாரி சாரி உதயாவின் அண்ணா. நீங்க எழுத்துலயும் பேஸ்புக்கிலும் அன் ப்ரெண்ட் பண்ண என்ன அவசியம். சொல்ற காரணத்த எவனாவது காதுல பூ சுத்தி இருப்பான் அவன்கிட்ட சொல்லுங்க. சக உறுப்பினர் செத்துட்டான்னா இல்லையான்னு அவங்கங்க மனம் பதறிட்டு இருக்காங்க. உங்க எண்ணம் மற்றும் நடவடிக்கைகள் அப்படியொரு சந்தேகத்தை கிளப்பி இருக்கு. அது சரி எப்படி சார் எழுத்துல இருக்கும் நண்பர்கள் அடையாளம் பார்த்து பேஸ்புக்ல அன் ப்ரெண்ட் பண்ணிங்க. எழுத்துல இருக்கிற எல்லாரையும் உங்களுக்கு எப்படி தெரியும். தம்பியோட பாஸ்வேர்ட்ஸ் கூட அண்ணனுக்கு தெரியலாமுன்னு ஒத்துக்கலாம். விஷம் குடிக்கலையாம், தூக்கு மாட்டலையாம். ஆனா இயற்கையான மறைவாம். தம்பி செத்துபோன கவலை விட.. இங்க வந்து நிரூபிக்க வேண்டிய கவலைதான் உங்களுக்கு அதிகம்.அச்சோ பாவம்..! . என் வாழ்கையில ஒரு மரணத்துக்கு அனுதாபம் தெரிவிச்சதற்கு ரொம்ப கேவலமா இருக்கு. நாங்க போன் செய்தால் அட்டெண்ட் பண்ணி பதில் சொல் வனால உன் வீட்டு இழவு விழுந்துடுமா.. ? உணர்ச்சி வயப்பட்டு ரியாக்ட் பண்ணுவேன்னு தெரிஞ்சுதான்.. அப்படியொரு எண்ணம் போட்டேன். இப்போ.. தெளிவாயிடுச்சி.. வெரிகுட்.. இப்போ என்னோடு இரங்கல் எண்ணம் நீக்கிடுறேன். செத்துப்போயிட்டான்ல உன் தம்பி.. பின்ன சும்மா சும்மா வந்து இங்க உளறிட்டு இருக்காதே... கிளம்பு கிளம்பு...! ஒருத்தன் மரணத்தை இப்படி விளம்பரப்படுத்தி நான் பார்த்தது இல்ல. ஆவி மாதிரிலாம் திரும்ப திரும்ப வரக்கூடாது. சரியா.. பயப்படுவோம்ல.. எழுத்து நிர்வாகம் இந்த உறுப்பினரின் கணக்கை முடக்க வேண்டுகிறேன். . 15-Feb-2016 9:54 pm
கவிப் பிரியை - Shah - கோபிநாதன் பச்சையப்பன் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
24-Jan-2016 11:55 pm

என்ன குற்றம் செய்தேனென்றும் புரியல
ஏன் இந்த நிலையென்றும் தெரியல
நல்லாத்தான் படிச்சேன் அந்த பள்ளியில - காரணம்
சொல்லாமலே சேர்த்துட்டாங்க வேற பள்ளியில
பழகிய நண்பனெல்லாம் என் தெருவுல
பயந்து ஓடுறான் காரணம் விளங்கல

பல பேரு பரிதாபமாய் பார்க்கிறாங்க
சில பேரு ச்சீயென்று தூற்றுறாங்க
அப்பாவ தப்பானவன் என்று திட்டுறாங்க
அப்பாவி இவன் அம்மா என்றும் சொல்றாங்க

தப்பென்ன செய்ததிந்த புள்ள - அப்பன்
தப்பால வந்ததிந்த தொல்ல
பத்தினியாய் இவன் அம்மா வீட்டிலதான் இருக்க
பரத்தையத்தான் தேடி போனான்
பாழாய் போன கிறுக்கன்
பரத்தையிடம் பணம் கொடுத்து
படுக்கை சுகம் தேடித்தான்
பரலோகம் பறந்திடவே
பயண சீட்டும் வாங

மேலும்

மிகவும் நன்றி நண்பரே.......... 18-Mar-2016 2:49 am
அருமையான கவிதை 12-Mar-2016 9:59 pm
மிகவும் நன்றி சகோதரி........... 31-Jan-2016 10:02 pm
கவி அருமை... கவியின் கரு ஆழமானது... வாழ்த்துக்கள்.. 31-Jan-2016 6:09 pm
முஹம்மது ஹனிபா முஹம்மது ஸர்பான் அளித்த படைப்பை (public) Padmamaganvetri மற்றும் 4 உறுப்பினர்கள் பகிர்ந்துள்ளனர்
28-Jan-2016 10:48 am

தென்றலிலே தலை ஆட்டும் நிலமகளே!
சிட்டுக் குருவி காதல் கொண்டதோ உன் மேலே
உன்னை போல் பச்சைக்கிளிகள் காண்கின்றேன்
காட்டுக்குயில்கள் கூட்டுற்குள் நானும் ஒளிகின்றேன்.

அதிகாலை கனவில் பெண்ணும்
உன்னோடு உறக்கம் கொள்கிறாள்.
பனி பொழிவும் வித்தகக் கலைஞன்
தூக்கணாங்குருவி கூட்டுக்குள் வண்ணம் பூசுகிறது.

இரவு வந்தால் நிலவின் வெளிச்சம்
கதிரவன் மலர்ந்தால் நிழலின் வெளிச்சம்
பூக்கள் பூத்தால் இலையின் வெளிச்சம்
வானம் உடைந்தால் விண்மீன் வெளிச்சம்

மழலை போல் அல்லும் பகலும் ஆனந்தம்
அழகாய் தேடும் காட்சி எல்லாம் உனக்காக
செந்தமிழும் கவி பாட உன்னை நாடிடுவான்
கதிராடும் சாட்சியும் பெண்ணின் இடை என

மேலும்

வருகையால் மனம் மகிழ்ந்தேன்.உமது கருத்தால் கவிக்கு உயிர் கொடுத்தேன் பல்லாயிரம் கோடி நன்றிகள் நட்பே!! 07-Feb-2016 11:26 am
இயற்கை என்றுமே அழகுதான்..!! நன்றாக இருக்கிறது சர்பான். 07-Feb-2016 9:25 am
வருகையால் மனம் மகிழ்ந்தேன்.உமது கருத்தால் கவிக்கு உயிர் கொடுத்தேன் பல்லாயிரம் கோடி நன்றிகள் நட்பே!! 04-Feb-2016 9:00 pm
அழகான இயற்க்கை வர்ணனைகள் .......அபாரம் ........சார்பான் எனக்கு பிடித்த வரிகள் .......... ------------------------------------- பிரான்ஸ் நாட்டு பூக்களெல்லாம் ஒரு வகை தமிழ் நாட்டு பூக்கள் உதிர்ந்தும் கூந்தலில் வாழ்ந்திடும் காற்றில்லா தேசம் அது விண்வெளி காற்றுக்கு சேலை கட்டுது பச்சை புல்வெளி........... வாழ்த்துக்கள் சர்பான் ........... 04-Feb-2016 2:12 pm

வான்நிலவு வாடிப்போகுதே - அவள்
கண்கள் கண்டு தாழ்ந்து போகுதே

மேகப்போர்வை பின்னால் ஒளிந்து
வேகமாக போர்த்திக்கொள்ளுதே

வானில் தன்னை அழித்துவிட்டு
மீண்டும் புதிதாய் வரைந்துகொண்டு
பௌர்ணமியில் போட்டிக்கு அழைக்குதே....

கலங்கி போவாய் வெள்ளி நிலவே
களங்கம் இல்லா அவள் கண்கள் கண்டே..

கலப்பை கண்ணால் நெஞ்சை உழுது
காதல் விவசாயம் செய்பவள் அவளே

ஆண் இருவர் நிலவு சென்றார்
மணல் மட்டும் கொண்டு வந்தார்
பெண்ணிவளும் சென்றிருந்தால்
பூக்களுடன் வந்திருப்பாள்
வான் நிலவில் கூட – பிராண
வாயு கொடுத்திருப்பாள்

காட்சியிலே பிழை கொண்டேன்
கற்பனையில் வாழக்கண்டென்
காணுகின்ற காட்சிகளின்
அர்த்தங்கள் மாறக

மேலும்

மிகவும் நன்றி நண்பரே........ 09-Feb-2016 5:40 pm
சிறப்பான கவிதை 09-Feb-2016 1:55 pm
தங்கள் பாராட்டிற்கு மிகவும் நன்றி அம்மா.... 05-Feb-2016 3:17 pm
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (139)

Padmamaganvetri

Padmamaganvetri

Ramanathapuram
இராஜ்குமார்

இராஜ்குமார்

திரு ஆப்பனூர்
கவிஞர் செநா

கவிஞர் செநா

புதுக்கோட்டை, தமிழ்நாடு

இவர் பின்தொடர்பவர்கள் (139)

கியாஸ் கலீல்

கியாஸ் கலீல்

தர்ஹா நகர்
வேலு

வேலு

சென்னை (திருவண்ணாமலை)
சகா சலீம் கான்

சகா சலீம் கான்

சென்னை/ஆர்.எஸ்.மங்கலம்

இவரை பின்தொடர்பவர்கள் (142)

M.A.பாண்டி தேவர்

M.A.பாண்டி தேவர்

உசிலம்பட்டி
நா கூர் கவி

நா கூர் கவி

தமிழ் நாடு
கோபி புன்னகையுடன் :)

கோபி புன்னகையுடன் :)

திருவள்ளூர்
மேலே