வெங்கடேஷ் PG - சுயவிவரம்
(Profile)
எழுத்தாளர்
இயற்பெயர் | : வெங்கடேஷ் PG |
இடம் | : சென்னை |
பிறந்த தேதி | : |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 12-Feb-2015 |
பார்த்தவர்கள் | : 502 |
புள்ளி | : 58 |
வானொலியில்
நீ
தேனொலியாய்
ஒலித்த காலத்தில்
"மடை திறந்து தாவும் நதி அலையாய்",
இல்லங்களில் பாய்நது,
"பனி விழும் மலர் வனத்திற்கு"
அழைத்துச்சென்று,
"அந்தி மழை பொழிகிறது" என்றே
உன் குரலில் நனையவைத்தாய்!
காணொலி தொடங்கிய
தொலைக்காட்சி காலத்தில்
"ரம் பம் பம் ஆரம்பம்" என
ஆரம்பித்து,
உன் குரல் இல்லாது
"வெள்ளிக்கிழமை
ஒளியும் ஒலியும்"
ஒலித்திருக்குமா?
இணையம் உலகை
இணைக்கத் தொடங்கிய
காலத்தில்
சில புதிய பாடல்களில்
உனைக்காணவில்லையே
என்ற போது
" எனைக்காணவில்லையே நேற்றோடு
எங்கும் தேடிப்பார்க்கிறேன் காற்றோடு"
என்று பாடி
உன் இருப்பைச்சொன்னாய்.
அண்ணாத்த ஆடுறார்
என்று கமலை
ஆடவை
கருநிற நெற்றியில்
வெண்ணிறப் பொட்டு!
ஓவியனின்
தூரிகையிலிருந்து வடிந்த
ஒற்றைச் சொட்டு!
இருண்ட வனத்தில்
மலர்ந்த
சிறு மொட்டு!
எட்டாத உயரத்தில்
எப்படி வந்தது
இந்த வெள்ளைத்தட்டு!
ஓ
இன்று
பௌர்ணமியோ!
ஒரு வேளை உணவின்றி
ஏங்கும் வயிறுகள்
ஆயிரமிருக்க,
நாளுக்கு
மூன்று வேளைகளையும்
தாண்டி
வீங்கிய வயிறுகளுடன்
வெட்கமில்லாமல்
நாம்(ன்)
தலைக்கு மேல்
ஒர் கூரையில்லாமல்
தவிக்கும் குடும்பங்கள்
பல இருக்க,
தலைமுறைகட்கு
சொத்து சேர்க்கும்
ஆசையில் உறக்கமில்லாமல்
நாம்(ன்)
மாற்றுத்துணி இல்லாமல்
ஒற்றைத்துணியிலே
ஓராண்டை கடத்துவோர்
நமைக்கடந்து செல்ல,
அலமாரி அலற
துணிகள் நிறைந்திருந்தாலும்
மீண்டும் மீண்டும்
துணிக்கடைகளில்
மனநிறைவில்லாமல்
நாம்(ன்)
பிற உயிர்களை
அதன் பிறப்பு முதல்
ஆயுட்கைதிகளாய்
கட்டி வைத்து
ஒரு வேளை உணவுக்காக
இரக்கமில்லாமல்
வெட்டித்தின்று,
இரக்கத்தின் வடிவாய்
இறைவன் என்றொருவனை
நாமே உருவாக்கி
நீண்ட நாட்களுக்குப்பின் வந்த
சிறுமழையால்
முதன்முதலாய் வெளிநாட்டில்
கண்ட வெண்பனிப்பொழிவு தந்த
மகிழ்ச்சியும் துள்ளலும் மனதில்!
தூறல் தொடங்கிய போது
ஓடி ஒதுங்கத்தோன்றவில்லை
தூறலுடன் நின்றுவிடும் என்று
சிலரும்
இப்படியாவது குளிப்போம் என்று
பலரும்
பதட்டமின்றி நனைந்தபடி செல்ல!
தரை தொட்ட மழைத்துளிகள்
மறு நொடி கரைந்து மறைய
ஆண்டுகள் கடந்து
சந்திக்கும் நண்பர்களாய்
வானும் மண்ணும்
மழை நீரால் கை குலுக்க
இந்த சிறுமழை
வரும் நாட்களில்
பெருமழையாகி
சாலையில் பெருகிவரும்
தண்ணீர் லாரிகளை
குறைக்குமா?
அடர்ந்து பெரிதாய் வளர்ந்த மரங்கள் இரண்டு சற்று அருகருகே இருக்க, அவ்விரு மரங்களின் பொந்துகளில் இரண்டு அணில் குடும்பங்கள் தங்கள் குட்டி அணில்களுடன் வாழ்ந்து வந்தன. எப்பொழுதும் இரண்டு குட்டி அணில்களும் சேர்ந்து ஓடுவதும் விளையாடுவதுமாக பகல் பொழுதைக்கழித்து விட்டு மாலையில் அதனதன் மரப்பொந்துகளுக்குத்திரும்பி விடுவது வழக்கம். ஒரு மரத்தின் நீண்ட கிளை இரண்டாவது மரத்தை தொட்டபடி இருக்கும், அதுவே குட்டி அணில்களுக்கு பாலமாக ஒரு மரத்திலிருந்து இரண்டாவது மரத்திற்கு தரையைத்தொடாமல் செல்ல உதவியது. தரை வழியே செல்வது ஆபத்தானது என்பதால் இந்தக்கிளை பேருதவியாக இருந்தது.
ஒரு நாள் மாலைப்பொழுதில் வழக்கம்போல் இரண்டு
............................................................................................................................................................................................
துணி வாங்கச் சென்றவர்கள்
உடுத்தி வந்தனர்
வெயிலை.
முட்டி மண்ணை பிளந்து முளைக்கும்
விதை கொண்ட பலம்கூட நீ பெறவில்லையே
ஒரு அடி விழுந்தவுடனே குனிந்துவிடுகிறாய்!!!...
முதுகெலும்பில்லா மலர்கொடிகூட
கம்பை பற்றி வளரும்போது
உன் இருக்கைகையான நண்பர்களும்
மூன்றாவது கையென உன் நண்பன் நானும் இருக்கையில்
புழுதியில் ஏன் வீழ்கிறாய்???....
விடிந்தால் கதிரவன் வருவான்
பூக்கவைப்பான் என சூரியகாந்தி கொண்ட நம்பிக்கை போல
உனக்கும் ஒரு காலம் உண்டென்று ஏன் யோசிக்க மறுக்கிறாய்???...
ஒன்றை மட்டும் மறக்காதே!!!!
முயலா சீவனை இயற்கையும்
கால வெள்ளத்தில் அழித்துவிடும்....
கர்த்தா: தமிழ் தாசன்
பொய்த்த மழையால்
வந்த
கடன் வெள்ளத்தில்
உழுது உழைத்த
உத்தம தந்தையும்
அன்னையோடு
அன்னம் கொடுத்த வயலும்
அடித்துப் போக.
எஞ்சியது
இந்த வயலினும்
என் பங்கு நஞ்சும்
வயலின் வாசித்து
உணவை யாசிக்கவா?
எஞ்சிய நஞ்சையே
இறுதி உணவாக்கவா?
காவலாளி 1: நம்ம மந்திரி அரசியலில் மட்டுமல்ல "அரசி" இயலிலும் கை தேர்ந்தவரா எப்படி?
காவலாளி 2: நம் மன்னரின் அரசிகளில் இருவரை வளைத்து விட்டாராம். அதனால் தான்.
எத்தனை முறை சுவைத்தாலும்
திகட்டாதோ?
எத்தனை முறை ருசித்தாலும்
கரையாதோ?
விரல் சூப்பும் குழந்தையின்
கை விரல்.
சொந்த இல்லம் வாங்க எண்ணி
நொந்த உள்ளங்களே
நம் கனவு இல்லம் நனவாவது
அவ்வப்போது கனவில் மட்டுமே
விலை இறங்குமா?
வேள்விகளாலும் பதில் கிடைக்காத
கேள்வி
சுனாமி அலை போல்
விலை உயர்ந்தாலும்
பினாமியில் வாங்குவோரும்
உள்ளவரை
எங்கள் கனவு இல்லம்
என்றும் கனவாகவே!