பௌர்ணமி

கருநிற நெற்றியில்
வெண்ணிறப் பொட்டு!

ஓவியனின்
தூரிகையிலிருந்து வடிந்த
ஒற்றைச் சொட்டு!

இருண்ட வனத்தில்
மலர்ந்த
சிறு மொட்டு!

எட்டாத உயரத்தில்
எப்படி வந்தது
இந்த வெள்ளைத்தட்டு!


இன்று
பௌர்ணமியோ!

எழுதியவர் : வெங்கடேஷ் PG (3-Jan-22, 6:54 pm)
சேர்த்தது : வெங்கடேஷ் PG
Tanglish : pournami
பார்வை : 99

மேலே