அற்வடை
அறுவடை
பருவக் காற்று செய் தவத்தால்
பயிர்கள் பசி தீர்க்கிறது
பாடும் பறவைகள் பரவசப்பட
பகுத்தறிவாளன் புலம்புவது எதனாலே !
வேர்வைக்கு சொந்தகாரன்
பேருக்கு உழைக்கமாட்டான்
நடு விளைச்சல் வீண் போக…………..
சேற்றுக்குள் புதையுண்ட புண்ணியவான்
காலிரண்டும் நலமாய் நடு நடுங்க
நந்தவனக் காடு நன்செய் நலினம் காணுது
நற்றமிழ் துணைவன் நன்றே மின்னிட
கதிர் மணி கவசத்தை மீட்டிங்கு
பச்சைத் திருமேனி பூத்து குழுங்குது
விடை கொடு திருநாள் வரவை எதிர்பார்த்து !