சிறு மழை

நீண்ட நாட்களுக்குப்பின் வந்த
சிறுமழையால்
முதன்முதலாய் வெளிநாட்டில்
கண்ட வெண்பனிப்பொழிவு தந்த
மகிழ்ச்சியும் துள்ளலும் மனதில்!
தூறல் தொடங்கிய போது
ஓடி ஒதுங்கத்தோன்றவில்லை
தூறலுடன் நின்றுவிடும் என்று
சிலரும்
இப்படியாவது குளிப்போம் என்று
பலரும்
பதட்டமின்றி நனைந்தபடி செல்ல!
தரை தொட்ட மழைத்துளிகள்
மறு நொடி கரைந்து மறைய
ஆண்டுகள் கடந்து
சந்திக்கும் நண்பர்களாய்
வானும் மண்ணும்
மழை நீரால் கை குலுக்க
இந்த சிறுமழை
வரும் நாட்களில்
பெருமழையாகி
சாலையில் பெருகிவரும்
தண்ணீர் லாரிகளை
குறைக்குமா?

எழுதியவர் : வெங்கடேஷ் PG (23-Jun-19, 6:50 pm)
சேர்த்தது : வெங்கடேஷ் PG
Tanglish : siru mazhai
பார்வை : 196
மேலே