கரைந்து விடாதே கால வெள்ளத்தில்

முட்டி மண்ணை பிளந்து முளைக்கும்
விதை கொண்ட பலம்கூட நீ பெறவில்லையே
ஒரு அடி விழுந்தவுடனே குனிந்துவிடுகிறாய்!!!...

முதுகெலும்பில்லா மலர்கொடிகூட
கம்பை பற்றி வளரும்போது
உன் இருக்கைகையான நண்பர்களும்
மூன்றாவது கையென உன் நண்பன் நானும் இருக்கையில்
புழுதியில் ஏன் வீழ்கிறாய்???....

விடிந்தால் கதிரவன் வருவான்
பூக்கவைப்பான் என சூரியகாந்தி கொண்ட நம்பிக்கை போல
உனக்கும் ஒரு காலம் உண்டென்று ஏன் யோசிக்க மறுக்கிறாய்???...

ஒன்றை மட்டும் மறக்காதே!!!!
முயலா சீவனை இயற்கையும்
கால வெள்ளத்தில் அழித்துவிடும்....

கர்த்தா: தமிழ் தாசன்

எழுதியவர் : தமிழ் தாசன் (4-May-17, 10:26 am)
சேர்த்தது : பாலா
பார்வை : 823

சிறந்த கவிதைகள் (இந்த வாரம்)

மேலே