பாலா - சுயவிவரம்
(Profile)


எழுத்தாளர்
இயற்பெயர் | : பாலா |
இடம் | : சென்னை, தமிழ் நாடு, இந்திய |
பிறந்த தேதி | : 13-Jan-1989 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 13-Apr-2017 |
பார்த்தவர்கள் | : 1656 |
புள்ளி | : 142 |
தீந்தமிழலை சுவைக்க விரும்பும் மற்றுமோர் தமிழ் தாசன்...
உன்னையும் என் காதலையும்
மட்டுமே கவியாய் வடித்த
என் கரங்கள் ஏற்றது ஓர் சபதம்
வடிக்காது மற்றுமோர் இன்பக்கவி...
எனை பிரிந்து உன்னவரின் கரம்
பற்றியமையால்...
இது பொறாமையாலல்ல
என் காதலியின் இடத்தை
வேறோர் பெண்ணோ
அன்னவரின் மனைவியான நீயும்
நிரப்பமுடியாமையால்...
உன்னையும் என் காதலையும்
மட்டுமே கவியாய் வடித்த
என் கரங்கள் ஏற்றது ஓர் சபதம்
வடிக்காது மற்றுமோர் இன்பக்கவி...
எனை பிரிந்து உன்னவரின் கரம்
பற்றியமையால்...
இது பொறாமையாலல்ல
என் காதலியின் இடத்தை
வேறோர் பெண்ணோ
அன்னவரின் மனைவியான நீயும்
நிரப்பமுடியாமையால்...
சற்றே பூத்த
மலரும் வெட்கி மறையும்
என்னை கண்ட நிந்தன்
மதியொளி துலங்கும் முகத்தையும்
மதியொளி கண்டு மலரும்
அல்லியாய் எந்தன் ஆசையையும் கண்டபின்...
உனை அடைய நான் புரிந்த
காதல் தவத்திலும் மேன்மையானது
உன் தவம் என்றறிந்தேன்...
நாம் இணைகையில்
எனக்கு முன்னதாக
உன் கருவிழி சிந்திய
ஆனந்தத்தை கண்டு...
கதிரவனின் கதகதப்பான
கரங்கள் நம்மை அரவணைப்பதால்
மலர்வோம் என்ற நம்பிக்கையில்
பூக்க தயாராயிருக்கும்
மலரின் நம்பிக்கை
அனைத்து உயிர்களும் பெறட்டும்...
இனிய ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள்.
சொடுக்கு விடும் தருணத்துள்
என்னுள் நுழைந்த உன்னை
வெளியேற்ற யுகங்கள்
பல தேவைப்படும்போலும்...
செல்வம் பெருக்கினோனுக்கு வாய்க்காத செல்வம்
ஒரு வேளை கூழ் மட்டுமே வாய்க்கப்பெற்ற
ஏழையாக்கப்பட்டவன் தேடிய செல்வம்
நிம்மதியான சிலமணிநேர உறக்கம்...
பூவை சுற்றி சுழலும்
அவ்வண்டறியும் சூட்சமம் நான் அறியேனோ?!
பூவிடமிருந்தும் உன்னிடமிருந்து தானாக வருவதில்லை
வண்டு உண்டு வாழ தேவையான தேனும்
நான் ஜீவித்திருக்க உனதன்பும்...
சருகும் தளிராகி
கல்லும் கனியாகி
நானும் புதுப்பித்தவனாகி
புது பித்தனும் ஆகி நிற்கின்றேன்
மின்னும் அப்பெண்ணின்
கண்ணின் ஒரு துளியால்.
மலர்போல் மென்மையாய் இருப்பவள் பெண்
கல் மனம் பெண் மனம் ஆகாது
எப்போதும் அமுத கலசம் தான்
அவள் மனம்
புன் சிரிப்பே அவள் சிரிப்பு
அது ஒரு போதும் பூமியை
அதிர்த்திடாது
சிறகு முளைக்காத "இதயத்திற்கு" சிறகு முளைப்பதும்
இயல்பாய் இருக்கும் "இதயம்" எம்பி குதிப்பதும்
நினைவு சுமக்காத "இதயம் " நினைவு சுமப்பதும்
வலி உணராத "இதயம்" வலி உணர்வதும்
குருதி வழியா "இதயம்" குருதி வழிவதும்
பாழாய்ப்போன "காதல் " வந்துவிட்டால் மட்டும்
"இதயம் "அது இயல்பு நிலையை மாற்றி(கொல்)க்கொள்கிறது
எங்கள் வாழ்வில் இனியதொரு தருணம்
உங்கள் வருகையோடும் வாழ்த்துகளோடும்
பூக்களோடு வரவேற்கிறோம்
புன்னகையோடு வாருங்கள்
உங்கள் வாழ்த்துமழையில்
வானவில் பூக்கட்டும்
வானிலும் எங்கள் வாழ்விலும்
வாழ்ந்துகாட்டுகிறோம்
வானும் மண்ணும் பயனுற !!
அழைப்பு இதழ்கள்