இவள் தான் பெண்

மலர்போல் மென்மையாய் இருப்பவள் பெண்
கல் மனம் பெண் மனம் ஆகாது
எப்போதும் அமுத கலசம் தான்
அவள் மனம்
புன் சிரிப்பே அவள் சிரிப்பு
அது ஒரு போதும் பூமியை
அதிர்த்திடாது
கொஞ்சி கொஞ்சி கிள்ளைபோல்
பேசுபவள் தான் பெண்

ஆறடி கூந்தல் அவளுக்கு அழகே
அதை அள்ளி, வாரி, பின்னி
அடக்கமாய் கட்டிய பின்னல் தான்
பெண்ணின் பின்னழகு
பெண் நடந்தால் பூமி அதிராது
அது அன்னத்திற்க்கே பதில் தரும்
நடை அழகு
தாய்மை அவளுக்கு ரத்த பந்தம்
அவளுக்கே உரித்தான
உயர் பண்பு

பொறுமையும், அடக்கமும்
அவளுக்கு ஆபரணங்கள்
கற்பென்னும் கோட்டைக்குள் அவள்
குடியிருப்பு
அந்த கோட்டை சிறிதேனும்
சிதைவடைந்தால் அக்கணமே
அவள் உயிரும் பிரிந்துவிடும்

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (4-May-17, 1:38 pm)
Tanglish : ival thaan pen
பார்வை : 124

மேலே