நானின்றி நீ வாழ வழி அறிந்தாயா

காவலுக்கு ஆளில்லை,
எனினும் கடந்துவர மனமில்லை...

துணைக்கு தோழருண்டு,
உனை இணையாக்கும் ஆவலும் மிக உண்டு...

மஞ்சள் கயிறு காத்திருக்க,
உன் கழுத்தை அணைக்க ஏங்கியிருக்க...

நீ நுழைந்த உனக்கான இதயம்,
மேலும் கவலையால் கனத்திருக்க...

நீயின்றி வாழேன் என அறிவாயா?
நானின்றி நீ வாழ வழி அறிந்தாயா?

உனைப்பற்றி கனாக்கள் அநேகம் கண்டேன்,
ஐயத்துடன் வினாக்களே அதிகம் கொண்டுள்ளேன்...

வருவாயா? என்னுள் நிறைவாயா?
உனை தருவாயா? இல்லை, எனை பிரிவாயா?

எழுதியவர் : தமிழ் தாசன் (25-Jun-23, 9:52 am)
சேர்த்தது : பாலா
பார்வை : 1856

மேலே