நாகரீகம் தவறும் நகரங்கள்
நாகரீகம் தவறும் நகரங்கள்
₹₹₹₹₹₹₹₹₹₹₹₹₹₹₹₹₹₹₹₹₹₹₹₹₹
அடுப்பூதியப் பெண்களும்
அலுவலகப் பணிபோக/
தடுத்திட்ட ஆண்வர்க்கம்
தடம்மாறுது போதையிலே/
கூடுகளைக் கலைத்து
கூட்டுவாழ்க் கைதொலைத்து/
அடுக்குமாடி குடியிருப்பில்
அடங்குது தனிகுடித்தனமாக/
மாடுபோல் உழைத்ததை
மாததவனை முழுங்கிட/
தடுமாறுது கடனிலே
தடையற்ற ஆடம்பரத்திலே/
ஆடுகளமின்றி உடலிலே
ஆட்கொள்ளும் நோய்களுமே/
ஈடுபாடும் குறையுது
ஈகையிலும் பண்பாட்டிலுமே/
உடுக்களாக(நட்சத்திரம்) ஒளிரும்
உடையும் மாறவே/
ஊடுருவும் நாகரீகத்தில்
உருமாறும் நகரமே/
சமத்துவ புறா. ஞான. அ.பாக்யராஜ்y