இறை சக்தி

வற்றாத கடல்களின் ஓயாத அலைகளிலும்
வற்றா ஜீவநதிகளின் அழகு ஓட்டத்திலும்
அவ்வப்போது பூமி வெடித்து தீப்பிழம்பாய்
கொட்டும் 'உருகிய பாறை' கலவையிலும்
பலவுருவாய் வீசும் காற்றிலும் மழையிலும்
கண்டு கொண்டேன்நான் பூமியின் உயிர்த்துடிப்பு

அன்னையின் கருவில் வளரும் குழந்தைக்கு
எப்போது வந்தது யார் வைத்தார்
உயித்துடிப்பு

சிந்தித்தால் புரியும் இயற்கையின் நாடியிலும்
உயிர்ப்பொருட்கள் அத்தனையிலும் இயங்கும் சக்தி
இறை சக்தி இறைசக்தியே

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசுதேவன் (24-Jun-23, 10:13 pm)
Tanglish : irai sakthi
பார்வை : 38

மேலே