கண்ணனை அறிந்துகொண்ட பின்னே இனி ஏது பயம்
அண்ணாந்து பார்க்கையில் அளவிலா நீளவானில்
கண்ணா எங்கும் நீயே தெரிகின்றாய் நீலவண்ணா
அந்த வானினுள் அடங்கும் அண்டகோளங்கள்
இன்னும் அதனுள் அடங்கும் அத்தனையிலும்
இயங்கவைக்கும் உயிர்ப்பொருளாய் இருந்து காக்கும்
பெருந்தெய்வமாய் இருக்கின்றாய் நீயே கண்ணா
படைத்தலும் காதலும் அழித்தலும் உந்தன்
அலகிலா விளையாட்டே அறிந்தேன் நான்
எனக்கினி ஏது நிலையிலா யாக்கையில் பயம்