என்னவளின் ஸ்பரிசம்

அன்பே...
என் கண்ணீர்த் துளிகளுக்கு
பன்னீர் தெளிக்கிறது
உந்தன் மெல்லியப் புன்னகை...

அன்பே...
எத்தனை பேர்
என்மீது நடந்தாலும் நான் கரையாகவே இருக்க விரும்புகிறேன்
அலையாக நீ வந்து என்னை முத்தமிட்டு செல்வதால்...

அன்பே...
உன்னை முத்தமிடவும்
தயங்குகிறது என் மனசு என் அருவா மீசை
உன் மெல்லிய இதழ்களை காயப்படுத்திவிடுமோ என்பதனால்...

அன்பே...
இந்த மழைத்துளிகளின்
மீது எனக்கு பொறாமையாக உள்ளது உன் அழகிய மேனியோடு
ஒட்டி உரசுகிறதே என்பதனால்...

அன்பே...
உனக்குத் தாலி கட்டுவதை நிறுத்தி
ஒரு தூளி் கட்டவேண்டும்
உன்னிடம் இன்னும் அந்தக் குழந்தைத் தனம் மாறவேயில்லை....

அன்பே...
உன் கூந்தலில் பிரிந்த
ஒற்றை முடியொன்று
என் கவிதைப் புத்தகத்தில் நுழைந்து புதுவாசம் வீசுகிறது...

அன்பே...
உன் நடை நளினத்தில்
என் வாலிபம் உடைந்து நொருங்கி ஊசலாடுகிறது...

*✍🏿செல்வா*

எழுதியவர் : செல்வமுத்து மன்னார்ராஜ் (16-Jul-25, 9:53 am)
Tanglish : ennavalin sparisam
பார்வை : 78

மேலே