பெண் உனைப்போல் யாருண்டு
பத்து வித வாயுவிலும்
உயிர் காக்க பிராணனாய் சுவாசமுண்டு,
கோடி வகை உறவுகளிலும்
நான் வாழ காரணமாய் உன் நேசமுண்டு...
என் உடலது நிமிர்ந்து நிற்க
இரு நூறும் ஆறும் எலும்புகளுண்டு,
நான் சமூகத்தில் நிமிர்ந்துநிற்க
உறுதியான உன் சொற்களுண்டு...
உயிர்ப்புடன் ஊனிருக்க
இரத்த ஓட்ட பாய்ச்சலுண்டு,
உயரங்கள் பல நான் தாண்ட
சிந்தை முழுதும் உனதெண்ண ஓட்ட வீச்சுமுண்டு...
வெற்றிக்கனி நான் பறிக்க
என் சரிபாதி நீயுண்டு,
மண்ணையும் பொன்னாக்கும்
பெண் உனைப்போல் யாருண்டு?